லியோ 4 மணி ரிலீஸ்.. தமிழ்நாட்டை தவிர உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் கொடுத்து வச்சவங்க!

சென்னை: தமிழ்நாட்டில் உருவாகி தமிழ் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நடிப்பில் உருவாகி உள்ள தமிழ் திரைப்படமான லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகாலை 4 மணிக்கு வெளியாகவில்லை என்பது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையே வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

Apart from Tamil Nadu rest of the world witness Leo FDFS at 4 am

முடிந்த வரை தயாரிப்பு தரப்பு சட்ட போராட்டம் வரை நடத்தி பார்த்தும் லியோ படத்துக்கான அதிகாலை சிறப்பு காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

மும்பை, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஓவர்சீஸ் என அனைத்து ஏரியாக்களிலும் பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ படத்தின் முதல் காட்சி வெளியாகிறது.

உயிரிழப்பால் ஏற்பட்ட சிக்கல்: இந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு ஒரே நாளில் இரு பெரும் நடிகர்களின் படங்கள் கிளாஷ் விட்ட நிலையில், அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போட்டு வந்த நிலையில், ரசிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது தான் எவ்வளவு முயற்சி செய்தும் அதிகாலை காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுக்க முடியாது என மறுக்க காரணம் என்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் வேண்டாம்: லியோ படம் வெளியாகும் நேரத்தில் விஜய் ரசிகர்கள் எந்தவொரு அசம்பாவிதங்களையும் உணர்ச்சி மிகுதியில் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும், ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கியது, தியேட்டர் கண்ணாடிகளை சேதப்படுத்துவது என இந்த முறையும் சர்ச்சையை கிளப்பினால் அதன் பின்னர் தமிழ்நாட்டில் 9 மணி காட்சிக்கும் அரசால் அனுமதி கொடுக்க முடியாத சூழல் உருவாகி 11 மணிக்குத் தான் ஃபர்ஸ்ட் ஷோ என்கிற நிலை உருவாகிவிடும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Apart from Tamil Nadu rest of the world witness Leo FDFS at 4 am

கொடுத்து வச்சவங்க: தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மும்பை, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தளபதி ரசிகர்கள் கொடுத்து வச்சவங்க, நாளை காலை 4 மணிக்கே தளபதி தரிசனத்தை பார்க்கப் போறாங்க என விஜய் ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X