விஜய் டான்ஸ்க்காகவே எடுக்கப்பட்ட பாடல்.. நம்பர் 1 இடத்தை பிடித்தது !

சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் எந்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு டான்ஸிற்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது

விஜய்யின் டான்ஸிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களிலும் குத்துப்பாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது

இந்த நிலையில் விஜய்யின் டான்ஸ்க்காகவே கில்லி படத்தில் அப்படி போடு பாடல் வைக்கப்பட்டதாக இசையமைப்பாளர் வித்யாசாகர் சுவாரசிய தகவலை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சாதனை படைத்தது

சாதனை படைத்தது

விஜய்க்கு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு ,ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் பல திரைப்படங்கள் தமிழ் நாட்டில் வெற்றி பெறுவது போலவே மற்ற மாநிலங்களிலும் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகின்றன. இப்பொழுது மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் கில்லி. இயக்குனர் தரணியின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் 200 நாட்களையும் கடந்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது . விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை திரிஷா நடித்து இருப்பார்.

அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்

அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்

தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஒக்கடு படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியான கில்லி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

விஜய் டான்ஸ்க்காகவே

விஜய் டான்ஸ்க்காகவே

இந்த நிலையில் தெலுங்கில் ஒக்கடு படத்தில் இடம்பெற்ற இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் அப்படியே ரீமேக் செய்து விடலாம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இல்ல சார் அது தெலுங்குபாடல் நம்ம தமிழ்-குன்னே தனியா செமயா ஒன்னு பண்ணுவோம் என தயாரிப்பாளரை வற்புறுத்தி விஜய்யின் டான்ஸ்க்கு என்றே முக்கியத்துவம் கொடுத்து உருவான பாடல்தான் "அப்படி போடு"

நம்பர் 1 இடத்தை பிடித்தது

நம்பர் 1 இடத்தை பிடித்தது

அப்படி போடு வெளியாகி தயாரிப்பாளர் எதிர்பார்த்ததை விடவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தமிழை விடவும் மற்ற மொழிகளில் இந்த பாடல் பெருமளவு கொண்டாடப்பட்டது. பாலிவுட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆரம்ப பாடலாக அப்படி போடு பாடல் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று இன்றுவரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுவாரஸ்ய தகவலை இசையமைப்பாளர் வித்யாசாகர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X