twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மெர்சல்' தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 'மெர்சல்' படத்தின் தலைப்பு தொடர்பாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100-வது படமாக விஜய்யை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள படம் 'மெர்சல்'. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

    Appeal case against mersal was dismissed

    இந்நிலையில், 'மெர்சலாயிட்டேன்' என்ற பெயரில் நான் படம் தயாரித்து வருகிறேன். ஆகையால் 'மெர்சல்' எனும் டைட்டிலை விஜய் படத்திற்குப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, இரண்டு தலைப்பும் வெவ்வேறானவை, மெர்சல் படத்தை வெளியிடவோ விளம்பரம் செய்யவோ தடையில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

    தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    English summary
    Rajendran was convicted in the suit filed by the Chennai High Court to ban the 'Mersal' title. The appeals petition on the case has been dismissed now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X