Ethirneechal Marimuthu - வயிறு ஏன் இப்படி இருக்கு.. 11 நாட்கள் முன் எச்சரித்த நடிகர்.. கோபமான மாரிமுத்து
சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) நடிகர் மாரிமுத்து இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்னரே அவரது உடல்நிலை குறித்து எச்சரித்ததாக நடிகர் அப்பல்லோ ரவி தெரிவித்திருக்கிறார்.
வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், ராஜ்கிரண், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி வைரமுத்துவிடமும் சில காலம் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து நடிகராக களமிறங்கினார் அவர்.

நடிகராக மாரிமுத்து: தனது முதல் படமான யுத்தம் செய் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பல படங்களில் நடித்தார். கமல் ஹாசன் நடித்த விக்ரம், ரஜினி நடித்த ஜெயிலர் என தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஆதிகுணசேகரன்: பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கினார் மாரிமுத்து. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆணாதிக்க சிந்தனை ஊறிப்போனவராக நடித்து அப்ளாஸை அள்ளினார். அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் அதிகம் பிரபலமடைந்தார்.
மரணம்: இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அன்றைய தினம் காலையில் வளசரவாக்கத்தில் இருக்கும் டப்பிங் ஸ்டூடியோவில் சீரியலுக்கான டப்பிங்கை கொடுத்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. உடனே தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அப்பல்லோ ரவி: இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்த அப்பல்லோ ரவி மாரிமுத்து மரணம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போது அதாவது மாரிமுத்து இறப்பதற்கு 11 நாட்களுக்கு முன்பு அவரிடம், என்ன அண்ணே வயிறு ஜெமினி மேம்பாலாம் மாதிரி இருக்கிறது என்று கேட்டேன்.
நான் என்ன பேஷண்ட்டா?: உடனே அவர் ஏன் அப்பல்லோ இப்படி கேட்குற. நான் என பேஷண்ட்டா என கேட்டுவிட்டு பாரு ஆரோக்கியமாகத்தான் இருக்கேன் என்றார். ஆனால் அவரது வயிற்றில் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. நான் மருத்துவ துறையில் இருப்பதால், அண்ணே இரண்டு மணி நேரம்தான் ஆகும். ஒரு செக்கப் எடுத்துக்கலாம் என்றேன். ஆனால் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
அந்த சமயத்தில் அவரது பிஏவும் அருகில் இருந்தார். மாரிமுத்துவின் உயிரிழப்புக்கு நான் சென்றபோது அவர் என்னை கட்டி அணைத்து அழுதபடி அப்பல்லோ அண்ணே நீங்க அன்னைக்கே சொன்னீங்க. அப்போ வந்திருந்தா இப்படி நடந்துருக்காதே என்றார். எனக்கு இன்னமும் அதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என்று சோகத்துடன் பேசினார் அப்பல்லோ ரவி..


Click it and Unblock the Notifications











