அப்பாடக்கராகப்போகும் 'அழகர்சாமியின் குதிரை' புகழ் அப்புக்குட்டி

By Veera Kumar

சென்னை: அப்புக்குட்டி மாடர்ன் இளைஞராக நடித்துவரும் 'எங்க காட்டுல மழை' திரைப்படம் நகைச்சுவை படமாக எடுக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை இயக்கிய சி.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'எங்க காட்டுல மழை'.

நாய் அடிக்கும் கூத்து

நாய் அடிக்கும் கூத்து

பல எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, டக்ளஸ் என்ற கோல்டன் ரிக் வகை நாய் ஒன்று அடிக்கும் கூத்துகளை படம் முழுவதும் காண்பித்துள்ளனர். இது ஒரு முழு நீள நகைச்சுவை படமாகும்.

கதாநாயகன் மிதுன்

கதாநாயகன் மிதுன்

‘சென்னையில் ஒருநாள்' படத்தில் நடித்த மிதுன் கதாநாயகன், ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகி. அழகர்சாமியின் குதிரை படப்புகழ், அப்புக்குட்டி, மதுமிதா, அருள்தாஸ், சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சி.விஜய் இசையமைக்கிறார்.

குழந்தைகளை கவர திட்டம்

குழந்தைகளை கவர திட்டம்

படம் குறித்து இயக்குனர் பாலாஜி கூறியதாவது: இந்த படத்தில் நாய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. படத்தில் நாயகர்கள் அடிக்கும் பஞ்ச் வசனத்துக்கு நாய் கொடுக்கும் கவுண்டர் டயலாக்குகள் வெகுவாக எல்லோரையும் ரசிக்க வைக்கும். ஏற்கெனவே ‘குள்ளநரி கூட்டம்' படத்தை எடுத்ததன் மூலமாக குடும்ப இயக்குநர் என்ற பெயர் பெற்றுள்ளேன். குழந்தைகளையும் கவர்வதற்காகவே இந்த படத்தில் நாய் கதாபாத்திரத்தை இணைத்துள்ளேன்.

நம்ம அப்பு குட்டியா இது..?

நம்ம அப்பு குட்டியா இது..?

அப்புக்குட்டி இதில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கிராமிய மணம் தவழ வந்த அப்புக்குட்டி இதில், மாடர்ன் இளைஞராக, சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவராக நடித்துள்ளார். அவரது ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம் என எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறோம்.

மலேசியா.. சிங்கப்பூரில் பாடல்கள்

மலேசியா.. சிங்கப்பூரில் பாடல்கள்

படத்தில் மொத்தம் நான்குபாடல்கள் உள்ளன. அதில் எஞ்சிய 2 பாடல்களை படமாக்குவதற்காக மலேசியா, சிங்கப்பூர் பயணிக்க உள்ளோம். செப்டம்பர் மாதம் படம் வெளியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X