'வீரம்': தமன்னாவை போன்று பெரிதாக எதிர்பார்க்கும் அப்புக்குட்டி
சென்னை: வீரம் படத்தை தமன்னா, விதார்த் போன்று அப்புக்குட்டியும் பெரிதும் எதிர்பார்க்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா, சந்தானம், விதார்த், முனிஷ், பாலா, சுஹைல், அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் வீரம்.
வீரம் பொங்கல் விருந்தாக வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.

தமன்னா
தமிழில் படங்கள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு வீரம் படத்தில் அஜீத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த படம் மூலம் கோலிவுட்டில் தனது மார்க்கெட் மீண்டும் வலுப்பெறும் என்று நம்புகிறார் தமன்னா.

விதார்த்
மைனா படத்தில் நடித்ததன் மூலம் அமலா பால் மார்க்கெட் பிக்கப்பாகி அவரும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். ஆனால் அந்த படத்தின் ஹீரோ விதார்த்துக்கு தான் ஒர்க்அவுட் ஆகவில்லை. இந்நிலையில் அவர் அஜீத்தின் தம்பியாக நடித்துள்ள வீரம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

அப்புக்குட்டி
அழகர்சாமியின் குதிரை படத்துக்காக தேசிய விருது வாங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அப்புக்குட்டி. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களில் அவர் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் வீரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தனது மவுசு அதிகரிக்கும் என்று அவர் நம்புகிறார்.

ரமேஷ் கண்ணா
காமெடிக்கு பெயர் போன ரமேஷ் கண்ணா வீரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு அவரின் காமெடி நிச்சயம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











