April month movies: ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகும் படங்கள்.. அட ஜிவி பிரகாஷ் படங்கள் 2 ரிலீசாகுதா!
சென்னை: 2024ம் ஆண்டு துவங்கி அதற்குள் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று மாதங்களில் ஏறக்குறைய 70க்கும் மேற்ப்பட்ட படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்களில் சில படங்களே அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன் ஆகிய படங்கள் அதிக கவனத்தை பெற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் படங்கள் சிறப்பான கவனத்துடன் ரிலீசாகி வருகின்றன.
ஏப்ரல் மாதம் பிறந்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகினற்ன. தேர்தலுக்கு முன்னதாகவே அதிகமான தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்நிலையில் எதிர்வரும் கோடையை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்ள குடும்பத்தினருடன் என்ஜாய் செய்ய திரைப்படங்களும் நல்ல சாய்சாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அந்த வகையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் ரிலீசாகவுள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டுமே திரையரங்குகளை முற்றுகையிட ஏராளமான படங்கள் காத்திருக்கின்றன.

பொங்கல் ரிலீஸ் படங்கள்: இப்போதுதான் 2024ம் ஆண்டு துவங்கி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியது போல உள்ளது. ஆனால் அதற்குள் மூன்று மாதங்கள் கழிந்துள்ளன. இடையில் பொங்கல் பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடியுள்ளோம். முன்னணி நடிகர்களின் நடிப்பில் 4 படங்கள் பொங்கலையொட்டி வெளியாகி சக்கை போடு போட்டன. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன் ஆகிய படங்கள் பொங்கலையொட்டி வெளியாகி மிகுந்த கவனத்தை பெற்றன. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் படம் வரவேற்பை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்தது.
70க்கும் மேற்பட்ட படங்கள்: இந்த மூன்று மாதங்களில் 70க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியான நிலையில், பிற மாநில மொழிப்படங்களும் தமிழில் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளன. மலையாளத்திலிருந்து மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகி தமிழ்ப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் டஃப் கொடுத்துள்ளன. இந்நிலையில் இந்த ஏப்ரல் மாதத்தில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் அனைத்துமே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றியில் முதல் வாரத்திலேயே ஜிவி பிரகாஷின் கள்வன் படம் வெளியாகவுள்ளது. வரும் ஏப்ரல் 4ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
2 ஜிவி பிரகாஷ் படங்கள்: படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜிவி பிரகாஷ் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ள இந்தப் படம் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அடுத்த வாரத்திலேயே ஜிவி பிரகாஷின் அதாவது வரும் ஏப்ரல் 11ம் தேதி அவரது DeAr படம் வெளியாகவுள்ளது. ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் மாஸ் காட்டியுள்ளன. இவரது ரெபல் படமும் இந்த மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய 100வது படத்தில் இசையமைத்துவரும் ஜிவி பிரகாஷ் நடிகராகவும் 25வது படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் ரோமியோ: இதனிடையே இந்த ஏப்ரல் மாதத்தில் ஏப்ரல் 11ம் தேதி விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் ரிலீசாகவுள்ளது. படத்தில் மிர்ணாளினி ரவி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சுந்தர் சி இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4 படம் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இதனிடையே சந்தானத்தின் இங்கே நான் தான் கிங்கு படமும் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஷாலின் ரத்னம் படம்: இதனிடையே நடிகர் விஷால் -இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே குறைந்த முதலீட்டில் உருவாகியுள்ள டபுள் டக்கர் படம் ஏப்ரல் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஏப்ரல் மாதத்திலேயே விஜய்யின் GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் 22ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியும் ஏப்ரல் மாதத்திலேயே அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











