நடு ரோட்டில் பைக் ரேசருடன் மோதிய பிரபல ஹாலிவுட் நடிகர்..நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல!

அமெரிக்கா: அக்வாமேன், டியூன் போற டிசி படங்களில் நடித்து புகழ்ப் பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோ.

மார்வெள்ஸ் படங்களின் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்படும் ஜேசன் மோமோவுக்கு, உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அக்வாமேன் ஹீரோ ஜேசன் மோமோவுக்கு நடந்த சம்பவம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

ஜேசன் மோமோ என்ற பெயரைக் கேட்டாலே மார்வெள்ஸ் ரசிகர்களுக்கு ஒரே உற்சாகமாத்தான் இருக்கும். சூப்பர் ஹீரோவாக அவர் திரையில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் குழந்தைகள் முதல் அனைவரையும் பரவசப்படுத்தும். இவரது அதிரடி சாகசங்களை ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்தும், கூச்சலிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

அக்வாமேன்

அக்வாமேன்

ஜேசன் மோமோ மட்டுமே அக்வாமேனாக நடிக்க நல்ல சாய்ஸ் என்பது ரசிகர்களின் விருப்பம். அவரைத் தவிர இந்தக் பாத்திரத்துக்கு வேறு யாரையும் நினைத்துவிட முடியாது. டாட்டூ உடம்போடு கேம் ஆஃப் த்ரோன்ஸின் கால் த்ரோகோ அப்படியே அக்வாமேனாக இருக்கிறார். இதனால், ஜேசன் மோமோ படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

பைக் ரேசருடன் மோதல்

பைக் ரேசருடன் மோதல்

இந்த நிலையில், ஜேசன் மோமோ பைக் ரேசருடன் மோதிய செய்தி அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காரில் சென்று கொண்டிருந்த ஜேசன் மோமோ, பைக்கில் வந்த 21வயது இளைஞர் மீது மோதியுள்ளார். இதனால், அந்த இளைஞர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்து இல்லை

உயிருக்கு ஆபத்து இல்லை

இந்த விபத்தில் ஜேசன் மோமோவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. மிக முக்கியமாக பைக்கில் வந்த இளைஞருக்கு மட்டும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றும் கூறப்படுகிறது. விபத்து நடந்ததுமே காரில் இருந்து இறங்கிய ஜேசன் மோமோ, பைக்கில் இருந்த இளைஞரை காப்பாற்ற முயன்றதும் தெரியவந்துள்ளது.

போலீஸார் விசாரணை

போலீஸார் விசாரணை

இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக சென்றதும், சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் சென்றதும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் முழுமையான விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X