ஆக்வாமேனை இப்படி அம்பியா மாத்திட்டீங்களே பிக் பாஸ்.. மீசையை எடுத்து ஆளே மாறிய நிரூப்!

சென்னை: அண்டர் டேக்கர், கால் த்ரோகா, ஆக்வாமேன் என நிரூப்பை அன்போடு அழைத்து வந்த ரசிகர்கள் இன்னைக்கு அவர் மீசையை எடுத்து அம்பியாக மாறியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிராமத்து ஆளாக மாற ராஜு பாய் திடீரென தனது மீசை ஸ்டைலை எல்லாம் மாற்றிய நிலையில், சினிமா சினிமா டாஸ்க்குக்காக தனது மீசையை ஷேவ் செய்தார் நிரூப்.

இந்த வாரம் நிலம் ஆற்றலை கொண்டு பெட்ரூம் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிரூப் இப்படி ஒரேயடியாக மாறி விட்டாரே என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஆக்வாமேன்

ஆக்வாமேன்

ஆறடி உயரத்தில் அண்டர் டேக்கர் போல இருக்கிறார் நிரூப் என கூறி வந்த ரசிகர்கள் அதன் பின்னர் அவரது கூந்தல் அழகை பார்த்து இவர் கேம் ஆஃப் த்ரோன்ஸில் கால் த்ரோகாவாகவும் ஆக்வாமேன் படத்தில் கதாநாயகனாகவும் நடித்த ஜேசன் மோமோ போல இருக்கிறார் என இவருக்கு ஆக்வாமேன் என்றே பட்டப்பெயர் வைத்து விட்டனர்.

நிரூப்புக்கு சகல அதிகாரமும்

நிரூப்புக்கு சகல அதிகாரமும்

நிலம் காயினை வைத்து இருக்கும் நிரூப் இந்த வாரம் பெட்ரூம் ஏரியாவை ஆட்சி செய்து வருகிறார். காலையில் பாட்டு போடுவதற்கு முன்பாகவே அவருக்கு பிரேக் ஃபாஸ்ட் செய்து எடுத்துத் தர வேண்டும் என்றும் அவர் சொல்லும் கட்டளைகளை மற்றவர்களுக்கு சொல்லும் அசிஸ்டன்டாக அக்‌ஷராவையும் நியமித்து வேற லெவல் சர்வாதிகாரம் செய்ய அவருக்கு சகல அதிகாரத்தையும் பிக் பாஸ் வழங்கி உள்ளார்.

சினிமா சினிமா

சினிமா சினிமா

கடந்த சீசனில் ஜோடி ஜோடியாக ஆட வைத்த பிக் பாஸ் இந்த சீசனில் கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்களை தனித்தனியாக ஆட வைத்து அதே பழைய புளிச்ச மாவுக்கு சினிமா சினிமா எனும் பெயரையும் வைத்து மேட்ச் செய்துள்ளார். அந்த டாஸ்க்கில் நிரூப்புக்கு மட்டும் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் வாய்ப்பினை கொடுத்துள்ளார்.

மீசை போச்சே

மீசை போச்சே

அம்பியாக நிரூப் கெட்டப் போட்டு மாற.. அவரது மீசையை ரொம்பவே இடைஞ்சலாக இருந்ததை உணர்ந்து கதாபாத்திரமாகவே மாற வேண்டும் என்பதற்காக தன்னுடைய மீசையை ஷேவ் செய்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டார். நிரூப்பின் இந்த புது கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் என்னடா ஆக்வாமேனை அம்பியாக மாத்திட்டீங்க என கிண்டல் செய்து வருகின்றனர்.

நோ ஷேவ் நவம்பர்

நோ ஷேவ் நவம்பர்

நவம்பர் மாதம் ஆனாலே இளைஞர்கள் எல்லாம் No Shave November என சிங்க குட்டிகளாக வலம் வரும் நிலையில், இப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் சிங்கமாக இருந்த நிரூப்பை டாஸ்க்கின் பெயரில் ஷேவ் செய்ய வைத்து சும்மா சிதைச்சிட்டீங்களே பிக் பாஸ் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

அம்பியா அந்நியனா

அம்பியா அந்நியனா

ஒண்ணுமே செய்யாத இசைவாணியையே சர்வாதிகாரி என முத்திரை குத்திய நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் பச்சை மிளகாய், பாவக்காய் தின்ன வைப்பதில் இருந்து பல பனிஷ்மென்ட்டுகளை கொடுத்து வரும் நிரூப் அம்பியா இருந்து ஆட்சி செய்வாரா? இல்லை அந்நியனாக மாறி பஞ்சாயத்தை கூட்டுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X