நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஏ.ஆர். அமீன்.. செம க்யூட்டா இருக்காரே!

சென்னை: அப்பா ஏ.ஆர். ரஹ்மானுக்கு மட்டுமல்ல இன்று மகன் ஏ.ஆர். அமீனுக்கும் ஹேப்பி பர்த்டே தான்.

கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்த ஏ.ஆர். அமீன் இன்று தனது 19வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடன் ரெஸ்டரன்ட் ஒன்றில் ஏ.ஆர். அமீன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இசைபுயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்

இசைபுயலுக்கு குவியும் வாழ்த்துக்கள்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோகன்லால், ஆண்ட்ரியா என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ரஹ்மானை வாழ்த்தி வருகின்றனர். இதே நாளில் தான் ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீனும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இசைப்புயலின் வாரிசு

இசைப்புயலின் வாரிசு

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் அவரது மனைவி சாய்ரா பானுவுக்கும் கடந்த 2003ம் ஆண்டு தந்தை ரஹ்மானின் பிறந்தநாளான ஜனவரி 6ம் தேதியே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஏ.ஆர். அமீன் என மகனுக்கு பெயர் வைத்து அழகு பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் தன்னை போலவே தன் மகனையும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார். ஓகே கண்மணி படத்தில் 'மெளலா வா சலீம்' பாடலை பாடிய அமீன் தொடர்ந்து ஏகப்பட்ட பாடல்களை பாடி வருகிறார்.

விக்கி நயனுடன் அமீன்

விக்கி நயனுடன் அமீன்

அப்பா ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுக்க இருக்கும் கோடான கோடி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து சொல்லி வரும் நிலையில், மகன் ஏ.ஆர். அமீனுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளனர். மூவரும் இணைந்து ரெஸ்டரன்ட் ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நயன்தாரா டிசர்ட் வாசகம்

நயன்தாரா டிசர்ட் வாசகம்

செம க்யூட்டாக பப்ளியாக இருக்கும் ஏ.ஆர். அமீனை வாழ்த்திய ரசிகர்கள் அப்படியே தங்கத்தை பார்க்காமல் விடுவார்களா? நயன்தாராவின் அழகை ரசித்த ரசிகர்கள் அவரது டிசர்ட்டில் எழுதியிருக்கும் 'Together For Romance' என்ற வாசகத்தை பார்த்து ஒரே லவ் மூடில் தான் சுற்றி வருகிறாரா லேடி சூப்பர்ஸ்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X