அம்பானி மகன் திருமண செலவு இத்தனை ஆயிரம் கோடியா?.. ஏ.ஆர். ரஹ்மான் மகன் யாருடன் இருக்காரு பாருங்க!

மும்பை: ரிலையன்ஸ், ஜியோ நிறுவனங்களின் அதிபதியான முகேஷ் அம்பானி இந்தியாவில் முதல் பணக்காரராக திகழ்கிறார். தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு சுமார் 4000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் உலா வருகின்றன.

சினிமா பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துக் கொடுத்து கால்ஷீட் அளவுக்கு காசு கொடுத்தும் அழைத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

AR Ameen meets John Cena at Anat Ambani Wedding

மேலும், சினிமா பிரபலங்கள் ஆடுவதற்கும், பாடுவதற்கும் தனி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. சில முன்னணி பிரபலங்கள் மரியாதை நிமித்தமாகவே அழைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு உரிய வசதிகளில் எந்தவொரு குறையும் வைக்காமல் விமான செலவு உள்பட, தங்குமிடம், உணவு என அனைத்தையும் அம்பானியே செலவு செய்துள்ளார் என்கின்றனர்.

4000 கோடி செலவு: மற்றவர்களுக்குத்தான் 4000 கோடி ரூபாய் பெரிய விஷயமாக தெரியும் என்றும் இது அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 10 சதவீதம் கூட இருக்காது என்றும் சராசரியாக இந்தியர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணங்களுக்கு கடன் வாங்கித்தான் வரவை விட அதிகமாக செலவு செய்கின்றனர் என்றும் அம்பானி திருமணத்திற்கு செய்த செலவையும் வேறு வழியில் பிசினஸ் ஆக்கியிருப்பார் என்கின்றனர். சொர்க்கபுரி என்று ஒன்று இருக்கிறதா? என்பதே சந்தேகம் தான். ஆனால், அது கூட இந்த அளவுக்கு இருக்காது என அம்பானி மகன் திருமணத்தை பற்றிய பேச்சுக்கள் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகின்றன.

ரம்பை, மேனகை தோத்துடுவாங்க: இந்திரலோகத்தில் இருப்பதாக புராணங்களில் கூறப்படும் ரம்பை, மேனகை, ஊர்வசி எல்லாம் தோற்றுவிடும் அளவுக்கு கிம் கர்தாஷியன், நயன்தாரா, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கத்ரீனா கைஃப், அனன்யா பாண்டே, சுஹானா கான், ஜான்வி கபூர், பூஜா ஹெக்டே, மானுஷி சில்லர், மகேஷ் பாபுவின் மகள் நடிகைகளின் அணிவகுப்பும் கண்கொள்ளா காட்சியாக மாறியிருக்கிறது.

AR Ameen meets John Cena at Anat Ambani Wedding

ஜான் சினாவுடன் ஏ.ஆர். ரஹ்மான் மகன்: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின், தோனி, ஷாருக்கான், மகேஷ் பாபு, சூர்யா, நயன்தாரா, ஜோதிகா, விக்னேஷ் சிவன், அட்லீ என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் WWE வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சினா கலந்து கொண்டார். அவருடைய மிகப்பெரிய ரசிகரான ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்பா ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குடும்பத்தினருடன் ஏ.ஆர். அமீன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்தில் கலந்து கொண்டார்.

ஜான் சினாவுக்கு உற்சாக வரவேற்பு: முன்னதாக ஜியோ கன்வென்ஷன் சென்டர் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஸ்பைடர் மேன் நடிகரான டாம் ஹாலண்ட் தனது காதலியான நடிகை ஜெண்டாயாவுடன் வந்து கலந்துக் கொண்டார். சங்கீத் நிகழ்ச்சி ஜஸ்டின் பீபர் பங்கேற்று பனியனுடன் மணமக்களுடன் பாடல் பாடி நடனமாடினார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட ஜான் சினாவை முகேஷ் அம்பானி ஆரத்தழுவி வரவேற்ற காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இந்தளவுக்கு பிரபலங்களை எந்தவொரு படத்திலும் சினிமா விழாவில் கூட பார்த்து விட முடியாது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X