23 வயசு இளம் புயலான விஜய் மகன்.. இசைப்புயல் மகன் எப்படி வாழ்த்து சொல்லியிருக்காரு பாருங்க!

சென்னை: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பிறந்த நிலையில், தற்போது தனது 23வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சஞ்சய்.

 AR Ameen wishes Actor Vijays son Jason Sanjay on his birthday

விஜய் மகன் பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வரும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் 23வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சஞ்சய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

வேட்டைக்காரன் படத்தில்: 2009ம் ஆண்டு வெளியான விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலேயே 9 வயதில் சினிமாவில் அப்பா விஜய்யுடன் இணைந்து அசத்தலான ஆட்டம் போட்டிருந்தார் சஞ்சய்.

"நான் அடிச்சா தாங்க மாட்ட" பாடலுக்கு குட்டி விஜய்யாகவே ஜேசன் சஞ்சய் என்ட்ரி கொடுத்து ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர், சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த சஞ்சய் வெளிநாட்டில் இயக்குநராகும் படிப்பைத் தான் தற்போது பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறும்பட இயக்குநர்: வெளிநாட்டில் சினிமா படங்களை இயக்கும் படிப்பை படித்து வரும் ஜேசன் சஞ்சய் Pull the Trigger உள்ளிட்ட சில குறும்படங்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து இயக்கியும் நடித்தும் உள்ளார்.

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சஞ்சய்யை ஹீரோவாக்கும் முயற்சியில் நடிகர் விஜய்யிடமே கதை சொன்னதாக பேட்டி ஒன்றில் விஜய்யே தெரிவித்து இருந்தார். கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் இயக்குநராகவோ அல்லது நடிகராகவோ சஞ்சய் களமிறங்க காத்திருக்கிறார்.

 AR Ameen wishes Actor Vijays son Jason Sanjay on his birthday

ஏ.ஆர். அமீன் வாழ்த்து: சஞ்சய் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது நண்பரான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சஞ்சய் உடன் எடுத்துக் கொண்ட பிரத்யேக போட்டோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனரேஷன் கூட்டணி ஸ்டார்ட் ஆகுது போல என ரசிகர்கள் ஏ.ஆர். அமீனின் வாழ்த்துக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X