மகேஷ் பாபு படம்... தமிழ் - தெலுங்கு பதிப்புகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த முருகதாஸ்!
மகேஷ் பாபு நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவரவிருக்கும் தனது புதிய படத்துக்கு SPYder (ஸ்பைடர்) என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.
கத்தி படத்துக்குப் பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட நீண்ட காலமாகியும் அஜீத் பாணியில் தலைப்பை மட்டும் அறிவிக்காமலேயே இருந்தனர்.

ஒரு வழியாக நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு வெளியாகிவிட்டது. 'ஸ்பைடர்' (SPYder) என்ற தலைப்பிலேயே தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியாகிறது.
மகேஷ்பாபு இப்படத்தில் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். எனவேதான் இந்தத் தலைப்பு.
ஆனால் இந்தத் தலைப்புக்கு தமிழில் வரிவிலக்கு கிடைக்காது. எனவே கடைசி நேரத்தில் உளவு அல்லது உளவாளி போன்ற ஏதாவது ஒரு பெயர் வரலாம் என்கிறார்கள். தலைப்பை விட டப்பு முக்கியமாச்சே!


Click it and Unblock the Notifications











