Sivakarthikeyan: பாலத்தில் அந்தர் பல்டி அடிக்கும் சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகர்களில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். திபாவளிக்கு ரிலீஸ் ஆன இவரது அமரன் படம் இவரை வசூல் ராஜாவாக மாற்றியுள்ளது. படம் இதுவரை ரூபாய் 250 கோடிகளை வசூல் செய்துவிட்டதாகவும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் ரூபாய் 300 கோடிகளை வசூல் செய்துவிடும் என்றும் படக்குழு நம்புகின்றது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக நடித்து வருகின்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சாய் பல்லவி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் படம் ஆகும். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

எஸ்.கே 23: சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 23வது படம். இந்நிலையில், எஸ்.கே 23 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. இதில் புறநகர் சென்னையில் உள்ள பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இருந்து அவர் கீழே குதிக்கும் காட்சிகள் இன்று அதாவது நவம்பர் 15ஆம் தேதி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிகள் பகல் நேரத்தில் படமாக்கப்பட்டதால், ரசிகர்கள் சிவகார்த்திகேயனைக் காண கூடினார்கள்.
வீடியோ: தொடக்கத்தில் வழக்கமான கூட்டமே இருந்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகின்றது என்ற தகவல் அக்கம் பக்கத்தில் பரவியதால், ரசிகர்கள் சிவகார்த்திகேயனைக் காணக் குவிந்தனர். இதனால் பெருங்களத்தூர் பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுமட்டும் இல்லாமல், அங்கு கூடிய ரசிகர்கள் அவரை வீடியோ எடுத்து இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் டூப் போடாமல் சிவகார்த்திகேயனே நடிப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

எஸ்.கே. 25: சிவகார்த்திகேயனின் 23வது படத்தினைப் பொறுத்தவரை படம் பக்காவான ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வருவதாக திரைத்துறையில் பரவலான பேச்சு உள்ளது. மேலும் படத்தினை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சிவகார்த்திகேயன் தனது 24வது படத்தினை டான் படத்தின் இயக்குநர் சர்க்ரவர்த்தி இயக்கத்திலும், 25வது படத்தில் சுதா கொங்காராவின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இதில் 25வது படம் புறநானூறு என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











