ஆக்ஷன் காட்சிகளில் விஜய்.. அப்படி இருக்கும்.. பாராட்டித் தள்ளும் துப்பாக்கி இயக்குநர்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

முன்னதாக துப்பாக்கி, கத்தி, சர்க்கார் படங்களில் ஏஆர் முருகதாஸ் இயக்க்ததில் நடித்திருந்தார் விஜய்.

அடுத்ததாக துப்பாக்கி 2 படத்தில் இந்த இணை மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. கோலிவுட்டில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்த போதிலும் தன்னுடைய டெடிகேஷனை கைவிடாமல் உள்ளார் விஜய்.

கரடுமுரடான பயணம்

கரடுமுரடான பயணம்

இந்த குணமே அவரது வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. மிகப்பெரிய டைரக்டரின் மகனாக திரையில் நுழைவது மிகவும் எளிதாக இருந்தது விஜய்க்கு. ஆனால் அதையடுத்தே அவரது கரடு முரடான பயணம் துவங்கியது. கோலிவுட்டில் தன்னை நிரூபிக்க, தக்கவைக்க அவரது போராட்டம் மிகப்பெரியது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

தற்போது அவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வெற்றிடையந்து வசூல்வேட்டை நிகழ்த்தியது. இதற்கு விஜய்யின் ஸ்டார் வேல்யூவும் மிகவும் பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் இவையெல்லாம் அவருக்கு ஒரு இரவில் கிடைத்துவிடவில்லை.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இதுகுறித்து அவர் பல பேட்டிகளில் பேசியுள்ளார். அவரது ரசிகர்களும் அவ்வப்போது இதுகுறித்து பேசி பெருமிதம் கொள்கின்றனர். தற்போது தளபதி 66 படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். படத்தில் அவருக்க ராஷ்மிகா மந்தனா ஜோடியாகியுள்ளார்.

லோகேஷுடன் கூட்டணி

லோகேஷுடன் கூட்டணி

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் விஜய். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ், அட்லி, சிவா போன்றவர்களின் இயக்கத்தில் விஜய் அடுத்தடுத்து இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏஆர் முருகதாஸ் பாராட்டு

ஏஆர் முருகதாஸ் பாராட்டு

இந்நிலையில் துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய ஏஆர் முருகதாஸ் தற்போது விஜய் குறித்த மகிழ்ச்சியான பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வார் விஜய் என்று அவர் கூறியுள்ளார்.

விஜய்யின் பிரத்யேக கவனம்

விஜய்யின் பிரத்யேக கவனம்

ஒரு இயக்குநராக இந்த தொடர்புகளை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் கடினம் என்றும் ஆனால் விஜய் இத்தகைய விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் கவனமாக நடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X