மகேஷ்பாபுக்கு வில்லனாக ஓகே சொன்ன விஜய்.. சுவாரஸ்யம் பகிர்ந்த இயக்குநர்!

சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே வித்தியாசமான முயற்சிகளுக்கு கைக்கொடுப்பவர்.

ஆனாலும் விஜய்க்கு இருக்கும் மாசான ரசிகர்கள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் காரணமாக அதிரடி ஆக்ஷன் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது வாரிசு படத்தில் இணைந்துள்ள விஜய் இதன் சூட்டிங் நிறைவு பெற்றவுடன் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தன்னுடைய அறிமுக படமான நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தபோது ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற விஜய். அதையே தன்னுடைய பாசிட்டிவ்வாக மாற்றினார். அதற்காக அவர் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை.

ரசிகர்களின் ரசனை

ரசிகர்களின் ரசனை

தொடர்ந்து காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என தன்னை சிறப்பாக மாற்றிக் கொண்டு நடித்துவந்த விஜய், தற்போது தனக்கான ரசிகர்கள், அவர்களின் ரசனை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல்மழை பொழிந்து வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் பீஸ்ட் படம்.

இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் விஜய். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டவர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார். மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் அதை தொடர்ந்த சூட்டிங் உள்ளிட்டவற்றிற்காக ரசிகர்களை காத்திருக்கின்றனர்.

மகேஷ்பாபு -விஜய் காம்பினேஷன்

மகேஷ்பாபு -விஜய் காம்பினேஷன்

முன்னதாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கத்தி, துப்பாக்கி மற்றும் சர்க்கார் படங்களில் நடித்துள்ள நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணி துப்பாக்கி 2 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே தனது பேட்டியொன்றில் மகேஷ்பாபு மற்றும் விஜய் காம்பினேஷன் குறித்த சுவாரஸ்யத்தை பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மகேஷ்பாபுவுக்கு வில்லனாக ஓகே

மகேஷ்பாபுவுக்கு வில்லனாக ஓகே

மகேஷ்பாபுவுடன் அந்த பேட்டியில் ஏஆர் முருகதாஸ் காணப்படுகிறார். விஜய்க்கு மகேஷ்பாபுவை வில்லனாக்கும் புதிய கான்செப்டுடன் தான் விஜய்யை அணுகியதாகவும் அவர் உடனடியாக ஓகே சொன்னதாகவும், ஆனால் மகேஷ்பாபு நடித்தால்தான் தான் அந்தப் படத்தில் நடிப்பேன் என்று அவர் கூறியதாகவும் ஏஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான முயற்சி

வித்தியாசமான முயற்சி

இந்த படத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழில் விஜய் ஹீரோ மற்றும் மகேஷ்பாபு வில்லன், அதேபோல தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோ மற்றும் விஜய் வில்லன் என்பதற்குதான் விஜய் ஓகே சொல்லியுள்ளார். இதுபோன்ற முயற்சில் மேற்கொள்ளப்பட்டால் அது கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுக்கும் சிறப்பாக அமையும். ரசிகர்களுக்கும்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X