AR Murugadoss: பாலிவுட் கிங் சல்மான் கானுடன் இணையும் AR முருகதாஸ்... பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த முறை சல்மான் கானுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்கவுள்ள நிலையில், பாலிவுட்டிலும் மாஸ் காட்டவுள்ளார் ஏஆர் முருகதாஸ்.
சல்மான் கானுடன் இணையும் ஏஆர் முருகதாஸ்
தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். அஜித் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படம் ஏஆர் முருகதாஸின் கேரியரையே உச்சம் தொட வைத்தது. இரண்டாவதாக கேப்டன் விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சூர்யாவுடன் கஜினி, 7 ஆம் அறிவு, சிரஞ்சீவி நடிப்பில் ஸ்டாலின், பாலிவுட்டில் அமீர்கான் நடித்த கஜினி, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், விஜய் நடிப்பில் கத்தி, துப்பாக்கி, சர்கார், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆகிய படங்களை இயக்கினார்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளிலும் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஹீரோக்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்த ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் 23வது படமான இது எஸ்கே 23 என்ற டைட்டிலில் உருவாகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
ஏஆர் முருகதாஸ் எஸ்கே 23 மூவி மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே வெறித்தனம் காட்டியுள்ளார். அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் ஏஆர் முருகதாஸ் இணையவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர்கான் நடிப்பில் கஜினி இயக்கிய ஏஆர் முருகதாஸ், பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தார். அதன்பின்னர் அவர் இந்தியில் படங்கள் இயக்கவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது சல்மான் கானுடன் ஏஆர் முருகதாஸ் இணையவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் போர்ச்சுக்கல் உட்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இந்தப் படத்திற்காக 400 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளாராம் ஏஆர் முருகதாஸ்.
சல்மான் கான் - ஏஆர் முருகதாஸ் இணையும் படம் பான் இந்தியா ஜானரில் உருவாகவுள்ளதாம். சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படப்பிடிப்பு முடிந்ததும், சல்மான் கான் படத்தை உடனே தொடங்கவுள்ளாராம் ஏஆர் முருகதாஸ். மேலும் இந்தப் படத்தை 2025 ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவும் இப்போதே பிளான் செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றிய அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











