2.0: 'ஒரிஜினல்' ஷங்கரை பாராட்டிய ஏ.ஆர். முருகதாஸ், அட்லி
Recommended Video

சென்னை : ஷங்கரின் 2.0 படத்தை இயக்குனர்கள் ஏ. ஆர்.முருகதாஸ் மற்றும் அட்லி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ஷங்கரின் சிஷ்யனும் படத்தை பாராட்டியுள்ளார்.
அட்லி
2.0 படம் அருமை. 3.0 கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது என்று கூறி தனது குரு ஷங்கர், ரஜினி, அக்ஷய் குமார், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் அட்லி.
ஏ.ஆர். முருகதாஸ்
2.0 படம் இந்திய சினிமாவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. ரஜினி சாரின் மாஸ் மற்றும் ஸ்டைலான நடிப்பை ரசித்தேன். அக்ஷய் குமார் நடிப்பு அருமை. படத்தை என்ஜாய் செய்தேன். ஷங்கர் மற்றும் மொத்த குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
அக்ஷய்
2.0 படத்தை பாராட்டி ட்வீட் போட்ட அட்லி மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார். அக்ஷய் குமார் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் 2.0 படத்தை பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











