twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருவிழா..தேரை வடம் பிடித்து இழுத்த ஏ.ஆர் முருகதாஸ்!

    |

    கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாமி தரிசனம் செய்தார்

    அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தீனா என்ற படத்தை இயக்கி மாஸ் இயக்குநர் என்ற பெருமையுடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஏ.ஆர் முருகதாஸ்.

    தீனா படத்திற்கு முன்பு தோல்வி படங்களால் துவண்டு போயிருந்த அஜித்துக்கு இப்படம் மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது.

    இது சூப்பர் மேட்டரா இருக்கே...ஏகே 63ல் தீனா பட கூட்டணி மீண்டும் இணைய போகிறதா? இது சூப்பர் மேட்டரா இருக்கே...ஏகே 63ல் தீனா பட கூட்டணி மீண்டும் இணைய போகிறதா?

    ஏ.ஆர்.முருகதாஸ்

    ஏ.ஆர்.முருகதாஸ்

    தீனா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயகாந்தை வைத்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என வெற்றிப்படங்களை கொடுத்தார். தர்பார் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், விஜய் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது, அந்த கதையில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறப்பு யாகங்கள்

    சிறப்பு யாகங்கள்

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பிறந்து வளர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பதியின் ஏற்றம் கொண்ட சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலில் திருபவித்ரோற்வம் விஸ்வக்சேனர், பகவத் சங்கல்பம், ஆச்சார்யவர்ணம், மிருத்சங்கிரணம், வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், பவித்ர பிரதிக்ஞை, வேத திவ்ய பிரபந்தத்துடன் பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து வரும் 7ம் தேதி வரை காலை, மாலையில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெறவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

    கலச அபிஷேகங்களுக்குப்பின் பெருமாள், தாயார் உள்ளிட்ட 9 சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கு 5 நாட்கள் பூஜிக்கப்பட்ட பவித்ர மாலையை சாற்றுகின்றனர். பூஜைகளை தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர். திரைப்பட இயக்குனர் முருகதாஸ் பவித்ரோற்சவத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.

    தேரை வடம் பிடித்து இழுத்தார்

    தேரை வடம் பிடித்து இழுத்தார்

    இதில் திருத்தேர் திருவிழாவில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு தேரை ஹர ஹர கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்..

    English summary
    Director AR Murugadoss chariot procession at the Kallakurichi Perumal temple festival
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X