எடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்
சென்னை: விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய், காஜல் அகர்வாலை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

துப்பாக்கி படத்தை முருகதாஸ் இந்தியிலும் ரீமேக் செய்தார். தமிழை போன்றே இந்தியிலும் ஹிட்டானது. இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படம் எடுக்க உள்ளதாக முருகதாஸ் விருது விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.
அதன் பிறகு அவர் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முருகதாஸ், விஜய் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணியாகிவிட்டது.
சர்கார் படம் சர்ச்சையில் சிக்கினாலும் அது ஹிட்டாகியுள்ளது. சர்கார் பிரச்சனை இன்னும் தொடர்ந்தாலும் யாரிடமும் மன்னிப்பு கேட்கக் கூடாது என்பதில் முருகதாஸ் உறுதியாக உள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











