அஜீத் இல்லை விக்ரமை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்
சென்னை: கத்தி படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் அஜீத்தை வைத்து படம் எடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை எடுத்தார். அதன் பிறகு மீண்டும் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வெளியிட்டார். படம் ரூ.100 கோடி வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகின.
கத்தி படத்தை அடுத்து முருகதாஸ் யாரை வைத்து படம் எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

அஜீத்
முருகதாஸ் தனக்கு முதல் படம் கொடுத்த அஜீத்தை வைத்து படம் எடுக்க உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அஜீத் வேறு இயக்குனர்களின் படங்களில் பிசியாக உள்ளார்.

ஐ
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இதையடுத்து முருகதாஸ் தனது புதிய படத்தில் விக்ரமை ஹீரோவாக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

விக்ரம்
முருகதாஸ் புதிய கதை ஒன்றை தயார் செய்துவிட்டாராம். அந்த கதைக்கு ஏற்ற ஹீரோவாக விக்ரம் உள்ளாராம். அதனால் அவரின் புதிய படத்தின் ஹீரோ விக்ரமே என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

10 எண்றதுக்குள்ள
விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு அவர் முருகதாஸின் படத்தில் நடிப்பாராம்.

சோனாக்ஷி சின்ஹா
முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றை இந்தியில் எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படத்தை எடுக்க இன்னும் நேரம் தேவை என்பதால் முருகதாஸ் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











