AR Murugadoss: “எல்லாம் சிவகார்த்திகேயன் முக ராசின்னு சொல்லுங்க..” AR முருகதாஸ் வாங்கிய சொகுசு கார்!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சில ஆண்டுகளாக படம் இயக்கும் வாய்ப்பில்லாமல் இருந்த ஏஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார் ஏஆர் முருகதாஸ்.
சொகுசு கார் வாங்கிய ஏஆர் முருகதாஸ்: அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த ஏஆர் முருகதாஸ், அதன்பின்னர் தொட்டதெல்லாம் சூப்பர் ஹிட்டானது. விஜயகாந்த் கெரியரில் அவரே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ரமணா என்ற படத்தை இயக்கி தெறிக்கவிட்டார்.

தொடர்ந்து சூர்யாவுடன் கஜினி, 7 ஆம் அறிவு, சிரஞ்சீவி நடிப்பில் ஸ்டாலின், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில் கஜினி, மகேஷ் பாபுவின் ஸ்பைடர், விஜய் நடிப்பில் கத்தி, துப்பாக்கி, சர்கார், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆகிய படங்களை இயக்கினார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளிலும் சூப்பர் ஸ்டார்களை இயக்கிய பெருமை இவருக்கு மட்டும் தான் உண்டு.
ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதோடு விஜய்யின் 66வது படத்தை இயக்க சான்ஸ் கிடைத்து அதுவும் ட்ராப் ஆனது. அதன்பின்னர் படங்கள் இயக்காமல் இருந்த ஏஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைத்துள்ளார். அதன்படி சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய படம் தொடங்குவதற்கு முன்பு சொகுசு கார் வாங்கி அசத்தியுள்ளார் ஏஆர் முருகதாஸ். 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய கருப்பு நிற பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை வாங்கியுள்ளார். தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் ஏஆர் முருகதாஸ் புதிய கார் வாங்கிய போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் சிவகார்த்திகேயன் படத்தில் கமிட்டான நல்ல நேரம் தான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இதே ரக பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை ரஜினிக்கு பரிசாக கொடுத்திருந்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். தற்போது பல திரை பிரபலங்களின் ஃபேவரைட் காராக பார்க்கப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7, ஏஆர் முருகதாஸின் கேரேஜ்ஜையும் அலங்கரிக்க காத்திருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் உட்பட்ட பலரும் ஏஆர் முருகதாஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











