சர்கார்: நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியில் முருகதாஸ்
Recommended Video

சென்னை: சர்கார் படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியது 49 பி சட்டம் பற்றி தான்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் உலக அளவில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளது. படம் தளபதி ரசிகர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
படத்தை பார்த்தவர்கள் கூகுளில் 49 பி சட்டம் பற்றி தேடியுள்ளனர்.

49 பி
49 பி சட்டத்தை பிரபலபடுத்திவிட்டோம் என்று சர்கார் படக்குழு பெருமை அடையலாம். நம் ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டுவிட்டால் 49 பி சட்டத்தின்படி நம் ஓட்டை நாமே மீண்டும் போட முடியும். இது பலருக்கும் தெரியாத நிலையில் சர்காரில் அதை தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்த பலரும் 49 பி பற்றி கூகுள் செய்து பார்த்துள்ளனர்.
முருகதாஸ்
49 பி சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகிழ்ச்சியில் முருகதாஸ் ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் பிக்சராக 49P என்பதையே வைத்துள்ளார்.
ஓட்டு
இது தாங்க 49 பி சட்டம்.
கோரிக்கை
சர்கார் படத்தில் வரும் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ள நிலையில் எந்த காட்சியையும் நீக்கக் கூடாது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விவேக்
படம் பார்த்துட்டு இதுவரைக்கும் ஓட்டு பண்ணாத ஒருத்தவர் ஓட்டு போடணும்னு நெனச்சா கூட போதும் சார் என்று விவாதத்தின்போது முருகதாஸ் சார் தெரிவித்தார். படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. வாழ்த்துக்கள் சார் என்று வாழ்த்தியுள்ளார் பாடல் ஆசிரியர் விவேக்.


Click it and Unblock the Notifications











