அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் - 'மார்வெல் கேங்'கில் சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ்
சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்திற்கு தமிழில் வசனம் எழுத இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் பட வரிசையில் 4வது படமான அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆரிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

அதில் தமிழுக்கு வசனம் எழுதும் பொறுப்பு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் அளிக்கப்பட்டுள்ளது. மார்வெல் படங்களின் ரசிகனான தனக்கு இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ்.
இந்நிலையில் மார்வெல் குழுவுக்கு வரவேற்று மார்வெல் இந்தியா ட்வீட் போட்டது. அதை பார்த்த முருகதாஸ் நன்றி என்று பதில் அளித்துள்ளார்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் ராபர்ட் டவ்னி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லெட் ஜொஹன்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடி வசூல் செய்தது. இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ. 200 கோடி வசூலித்த ஒரே ஹாலிவுட் படம் இது தான். இந்த படம் உலக அளவில் ரூ. 14 ஆயிரத்து 599 கோடி வசூல் செய்தது.


Click it and Unblock the Notifications











