மிஸ்சான தளபதி 65.. பான் இந்தியா படத்தை கையில் எடுத்த ஏ.ஆர். முருகதாஸ்.. டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் பான் இந்தியா படம் குறித்த அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு எப்படியும் தளபதி விஜய்யை வைத்து தளபதி 65 படத்தை இயக்கி விடுவார் ஏ.ஆர். முருகதாஸ் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இயக்குநர் நெல்சன் கைக்கு தளபதி 65 படம் சென்றது.

இந்நிலையில், சுதந்திர போராட்டத்தை மையமாக வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை சத்தமே இல்லாமல் உருவாக்கி வருகிறாராம் ஏ.ஆர். முருகதாஸ்.

மிஸ்சான தளபதி 65

மிஸ்சான தளபதி 65

துப்பாக்கி, கத்தி, சர்கார் என தளபதி விஜய்யை வைத்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் ஏ.ஆர். முருகதாஸ். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் உடன் தான் விஜய் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக தளபதி 65 படம் ஏ.ஆர். முருகதாஸை விட்டு மிஸ்சானது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

தர்பார் படத்தின் சொதப்பல் காரணமாகத்தான் தளபதி 65 மிஸ் ஆனது என்கிற விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், பான் இந்தியா படம் ஒன்றை சத்தமே இல்லாமல் உருவாக்கி வருகிறார் என்றும் இந்த ஆண்டே அந்த படம் வெளியாகும் என்றும் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திர ஆண்டு

சுதந்திர ஆண்டு

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு தான் ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கி வரும் புதிய படம். '1947' என்கிற டைட்டிலுடன் பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவில்லை. அதற்கு பதிலாக பிரபல தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பாட் உடன் இணைந்து தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் பொன் குமரன் இயக்கி வருகிறார். மற்றபடி படம் குறித்த தகவல்கள் பரம ரகசியமாகவே உள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பு

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பு

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றிக் கண்டுள்ளார். 1947 எனும் டைட்டிலும் உருவாகி வரும் இந்த படம் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்த வரலாற்று கதையாக உருவாகிறதா? அல்லது வேறு கதையா? என்கிற விவரங்கள் வெளியாகவில்லை.

அனிமேஷன் திரைப்படம்

அனிமேஷன் திரைப்படம்

தயாரிப்பை தவிர்த்து தி லயன் கிங் போன்ற ஒரு அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. துப்பாக்கி 2 படத்தை தளபதி விஜய்யுடன் இணைந்து முருகதாஸ் உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X