AR Murugadoss: கமல் படத்தை இயக்காமல் போக இவங்க தான் காரணம்... ஏஆர் முருகதாஸ் வேதனை!

சென்னை: அஜித்தின் தீனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ்.

அஜித்தை தொடர்ந்து விஜயகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, அமீர்கான், விஜய், மகேஷ்பாபு, ரஜினி என டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கியுள்ளார்.

ஆனாலும், ஏஆர் முருகதாஸ் இதுவரை கமல் நடிப்பில் ஒரு படம் கூட இயக்கவில்லை.

இதுகுறித்து ஏஆர் முருகதாஸ் கொடுத்த சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

 AR Murugadoss openly stated the reason for not directing Kamal film

கமல் படத்தை இயக்காமல் போக காரணம்: எஸ்ஜே சூர்யாவிடம் உதவியாளராக இருந்து இயக்குநரானவர் ஏஆர் முருகதாஸ். அஜித் கொடுத்த முதல் வாய்ப்பில் தீனா என்ற படத்தை இயக்கி தெறி மாஸ்ஸாக என்ட்ரியானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கினார் ஏஆர் முருகதாஸ். சோஷியல் மெசேஜ்ஜை பக்கா கமர்சியலாக சொல்வதில் இவரது மேக்கிங் தனித்து காணப்படும்.

விஜயகாந்த் நடிப்பில் ரமணா, சூர்யாவுடன் கஜினி, டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் ரமணா படத்தின் தெலுங்கு ரீமேக் ஸ்டாலின், அமீர்கானுடன் கஜினி இந்தி ரீமேக் என அடுத்தடுத்து மாஸ் காட்டினார். அதேபோல், விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, சர்கார், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தர்பார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

ஆனாலும், இதுவரை கமல் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட இயக்கவில்லை ஏஆர் முருகதாஸ். கமல் - ஏஆர் முருகதாஸ் கூட்டணி இணையும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இனிமேலும் இந்தக் கூட்டணி இணையுமா என தெரியவில்லை. ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி, அமீர்கான், அஜித், விஜய், சூர்யா, மகேஷ் பாபு என, ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஹீரோக்கள் எல்லோருமே சூப்பர் ஸ்டார்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 AR Murugadoss openly stated the reason for not directing Kamal film

இந்நிலையில் கமல் படத்தை இயக்க முடியாமல் போனது குறித்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏஆர் முருகதாஸ், டாப் 20 இயக்குநர்களின் சிறந்த படங்களை பார்த்தால், அது கமல் சார் நடித்த திரைப்படங்களாக தான் இருக்கும். கே பாலச்சந்தர், கே எஸ் விஸ்வநாதன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் இயக்கத்தில் கமல் நடித்த படங்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயக்குநர்களின் சிறந்த படங்களில் கமல் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியான இயக்குநர்களிடம் பணியாற்றிய கமல் சாரை, தன்னால் சிறப்பாக இயக்க முடியுமா எனத் தெரியவில்லை. அதனால் கமல் சாரை வைத்து படம் இயக்க பயந்துதான் அந்த தேர்வையே நான் எழுதவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார். ஏஆர் முருகதாஸின் இந்த பேட்டி கமல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

விஜய்யின் 65வது படத்தை இயக்கவிருந்த ஏஆர் முருகதாஸ், பின்னர் அதிலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும் படம் இயக்காமல் இருக்கும் ஏஆர் முருகதாஸ், விரைவில் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X