Gajini 2: அமீர்கான், சூர்யாவை வைத்து கஜினி 2 படமா?.. ஏ.ஆர். முருகதாஸின் மாஸ்டர் பிளான் கைகொடுக்குமா?
சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடனடியாக சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை ஹோல்டில் வைத்து விட்டு அந்த படத்தை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள ஏ.ஆர். முருகதாஸிடம் பாலிவுட் நடிகர் அமீர்கான் கஜினி 2 படத்தை பண்ணலாமா? என கேட்க அவரும் உடனடியாக ஓகே சொல்லியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் கசிந்துள்ளன.

இதில், ஹைலைட் என்னவென்றால் சூர்யாவையும் வைத்து கஜினி 2 படத்தை இயக்க ஏ.ஆர். முருகதாஸ் முடிவு செய்திருப்பது தான் என்கின்றனர்.
மெகா ஹிட் அடித்த கஜினி: 2005ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் படமெடுக்கும் வாய்ப்பு ஏ.ஆர். முருகதாஸுக்கு கிடைத்தது. அமீர் கான், அசின் நடித்த அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கிறிஸ்டோபர் நோலன் படம்: ஹாலிவுட்டில் 2000ம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான படத்தை தான் ஏ.ஆர். முருகதாஸ் இன்ஸ்பயர் ஆகி எடுத்திருப்பார். தனது படமே பாலிவுட் படம் அளவுக்கு வசூல் செய்யவில்லை என அமீர்கானிடமே கிறிஸ்டோபர் நோலன் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
கஜினி 2: தொடர்ந்து படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில், ஷாருக்கான் போல சில ஆண்டுகள் ஓய்வெடுக்க அமீர் கான் முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்தின் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவும் ஒப்புக் கொண்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், கஜினி 2 படத்தை உருவாக்கும் முயற்சியில் அமீர்கான் இறங்கியுள்ளதாகவும் சல்மான் கானை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸிடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மல்டிவெர்ஸ் படமா?: ஏ.ஆர். முருகதாஸ் அமீர் கான் மற்றும் சூர்யாவை வைத்து கஜினி 2 படத்தை பண்ணப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இருவரையும் வைத்து தனித்தனியாக பண்ணப் போகிறாரா அல்லது மல்டிவெர்ஸ் போல ஒரே படத்தில் இருவரையும் நடிக்க வைக்கப் போகிறாரா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஆர்ஜே பாலாஜி படத்தில் நடித்து முடித்து விட்டு கஜினி 2வை ஆரம்பிப்பாரா? அல்லது வாடிவாசலுக்கு விடிவு காலம் பிறக்குமா? என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.


Click it and Unblock the Notifications











