அஜீரணக் கோளாறு... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸ், தற்போது விஜய் நடிப்பில் கத்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இம்மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. வரும் தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், இன்று திடீரென முருகதாசுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அஜீரணக் கோளாறால் அவதிப்பட்ட முருகதாஸ்அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கூறுகையில், அஜீரணக் கோளாறு காரணமாகவே முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், முருகதாஸின் உடல்நிலை அபாய நிலையில் இல்லை என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே கத்திப் படம் தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், முருகதாசின் இந்த திடீர் உடல்நலக் கோளாறு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











