சம்பளம் இவ்வளவு தான்.. தயாரிப்பு நிறுவனம் கண்டிஷன்.. அதிர்ச்சியில் முருகதாஸ்!

சென்னை : படத்தின் பட்ஜெட் இவ்வளவு தான், சம்பளமும் இவ்வளவு தான் என தயாரிப்பு நிறுவனம் கூறி இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் முருகதாஸ்.

Recommended Video

Thalapathy 65 Bigg Breaking | A.R.Murugadoss | Vijay | Kajal | Pooja Hegde

'தீனா' படத்தின் மூலம் அறிமுகமான முருகதாஸ், ரமணா படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குனராக நிலை நிறுத்தி கொண்டவர் அப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்க்கு கதையை மட்டும் கொடுத்தவர் அதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சிரஞ்சீவியை இயக்குமளவிற்க்கு உயர்ந்தார்.

Ar murugadoss salary cut is the latest gossip on K town

மற்றொரு பக்கம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற கஜினி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கானை இயக்கினார். அது மாபெரும் வெற்றி பெற இயக்குனர் ஷங்கரால் கூட இந்தியில் சாதிக்க முடியாத உயரத்தை அடைந்தார். தொடர்ந்து அவருக்கு இந்தி வாய்ப்புகள் வர துவங்கின.

அந்த நேரத்தில் விஜயிடத்திலிருந்தும் அழைப்பு வர அவரை வைத்து 'துப்பாக்கி' படத்தினை இயக்கினார். அப்படம் விஜய் திரைப்பட வாழ்கையிலேயே பெரிய மைல்கல்லாக அமைய, அதனை தொடர்ந்து மீண்டும் 'கத்தி' படத்தில் இருவரும் இணைய அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வேளையில் இந்தியில் முருகதாஸ் துப்பாக்கி படத்தை ஹாலிடே எனும் பெயரில் ரீமேக் செய்ய அதுவும் பெரும் வெற்றியடைந்தது. இதனால் அவரது சம்பளமும் ஜெட் வேகத்தில் வளர்ந்தது.

Ar murugadoss salary cut is the latest gossip on K town

எந்த இயக்குனருக்கும் ஏற்றத்தாழ்வு வரும் தானே. அப்படி தான் முருகதாசுக்கு ஸ்பைடர் சரிவாக அமைந்தது. அதனை தொடர்ந்து விஜயை வைத்து இயக்கிய 'சர்கார்', ரஜினியை வைத்து இயக்கிய 'தர்பார்' இரண்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.

இதனால் அவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க வேண்டிய படமும் தள்ளி போனது. இந்த நிலையில் மீண்டும் விஜயை சந்தித்தவர் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்ச்சியில் இறங்கி உள்ளார். விஜக்கும் அந்த கதை பிடித்து போக அடுத்து முருதாஸ் படத்தில் நடிக்கிறார் என்று பலரும் சொல்லி கொண்டு வரும் இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முருகதாஸ் 18 கோடி தான் சம்பளம் தர முடியும் எனவும், படத்தின் பட்ஜெட்டையும் குறைக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறதாம்.

Ar murugadoss salary cut is the latest gossip on K town

இதற்கு காரணமாக 'சர்கார்' மற்றும் 'தர்பார்' படத்தின் வசூலை சுட்டி காட்டுகிறார்களாம். தனக்கா இந்த நிலை என அதிர்ச்சியில் இருக்கிறாராம் முருகதாஸ். காசு மேலே காசு டைரக்டர் தான் படத்தின் பாஸ் என்று எத்தனை பேர் சொன்னாலும் சில சரிவுகள் சில நேரங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். முருகதாஸிடம் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உண்மையில் சொன்னார்களா என்று தெரியவில்லை . ஆனால் சினிமா வட்டாரங்கள் கொரோனா வைரஸ் போல் இந்த விஷயத்தை பரப்பி வருகின்றனர். எப்படியோ துப்பாக்கி 2 வெற்றிகரமாக வெளியே வந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X