பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி !

சென்னை : இந்திய அளவில் மிக முக்கியமான இயக்குனராக உற்று நோக்கப்பட்டு வருபவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தான் இயக்கிய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் இன்று வரை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரைத் துறையை இந்திய அளவில் அனைவரையும் அண்ணார்ந்து பார்க்க செய்திருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ ஆர் முருகதாஸ் தனது முதல் படத்திற்கு உச்ச நடிகர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த தன்னை எழுப்பி முதல் வாய்ப்பளித்ததை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

சரியான நேரத்தில்

சரியான நேரத்தில்

திரைத் துறையைப் பொருத்தவரை நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று முதல் பட வாய்ப்பு. அந்த வாய்ப்பு மட்டும் சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் அமைந்து விட்டால் அவர்களின் வாழ்க்கையே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து விடுகிறது.

முதல்பட வேலைகள்

முதல்பட வேலைகள்

இவ்வாறு திருப்புமுனையாக அமைந்தது தான் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் திரைத்துறை வாழ்க்கை. தமிழ் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.ஆர் முருகதாஸ் தனது முதல் பட வேலைகளை தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் சந்தித்து வந்துள்ளார்.

வெற்றிப் படமாக

வெற்றிப் படமாக

ரட்சகன், குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானது தீனா என்ற படத்தில்தான். அஜித், லைலா, சுரேஷ் கோபி என பலரும் நடித்துள்ள இந்த படம் ஏ. ஆர் முருகதாஸுக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் பல நாட்கள் வெற்றிகரமாக தொடர்ந்து ஓடியது.

வாய்ப்பு தேடி

வாய்ப்பு தேடி

சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் மனோபாலா தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தனது முதல் படமான தீனா பட வாய்ப்பை பற்றிய சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் தான் உதவி இயக்குநராக இருந்தபோது முதல் படத்தை இயக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்ததாகவும் அதற்காக பல நடிகர்களையும் பல தயாரிப்பாளர்களையும் சந்தித்து வந்ததாகும்.

அஜீத்துடன் தீனா

அஜீத்துடன் தீனா

ஒருநாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அஜித் அனுப்பியதாக ஒரு நபர் வந்து தூங்கிக்கொண்டிருந்த தன்னை கூட்டிக்கொண்டு போய் சென்னையில் பிரபல ஹோட்டலில் அஜீத்துடன் தீனா படத்தின் கதை விவாதிக்க பட்டதாகும். அவ்வாறு எதிர்பார்க்காமல் தல அஜித் கூப்பிட்டு கதை கேட்டு அந்தக் கதை பிடித்துப் போனதால் அதே இடத்தில் ஆயிரத்தி ஒரு ரூபாய் முன்பணம் கொடுத்து இந்த படத்தை கண்டிப்பாக நாம் பண்ணலாம் என்றார்.

சுவாரசியமான நிகழ்வுகள்

சுவாரசியமான நிகழ்வுகள்

ஆனால் நாட்கள் குறைவாக உள்ளதால் ஒரு வாரத்திலேயே படப்பிடிப்புகள் தொடங்கி விடலாம் என அஜித் கூறியதாகவும், அதனால் முதல் படமான தீனா திரைப்படத்தை ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து நடிகர்களையும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் தயார் செய்து அஜித் சொன்ன ஒரு வாரத்திலேயே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இவ்வாறு தனது முதல் படமான தீனா படத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் அந்தப் பேட்டியின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

எப்போது இணைவார்கள்

எப்போது இணைவார்கள்

தனது முதல் படமே நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இந்திய அளவில் அனைவரும் உற்றுநோக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் முதல் படத்தில் இணைந்த இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் உட்பட அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X