ரெட்ட தல என்னுடைய ட்ரீம் டைட்டில்.. ரெட்ட தல பட புரோமோசன் விழாவிலேயே போட்டு உடைத்த ஏ.ஆர். முருகதாஸ்

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்கி உள்ளார். சாம் சி.எஸ். படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவும் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று அதாவது டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, " திருக்குமரன் எனது உதவி இயக்குநர். கஜினி, ஏழாம் அறிவு படங்களில் பணியாற்றி உள்ளார். துப்பாக்கி படத்தின் கதையில் பணியாற்றி உள்ளார். அப்போது திருக்குமரன் என்றுதான் பெயர் வைத்திருந்தார். இப்போது கிரிஷ் திருக்குமரன் என்று பெயரை மாற்றி வைத்துள்ளார். மேலும், இவரை இயக்குநராக நான் தான் மான் கராத்தே படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தேன். நான் அப்போதே எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று படங்கள் இயக்க வேண்டும் என்று திருக்குமரனிடம் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். எனது கம்பெனிக்கு அவர் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்.

AR Murugadoss Speech About Retta Thala Title At Arun Vijay Retta Thala Trailer Launch Event
Photo Credit:

கனவு டைட்டில்: ரெட்ட தல என்பது என்னுடைய டைட்டில். எனது கனவு டைட்டில், இந்த படத்தை வைத்து நான் எடுக்க வேண்டும் என்று நான் நினைத்த படமும் அப்படித்தான். ஒருநாள் திருக்குமரன் அலுவலகத்திற்கு வந்தார். வந்தவர், சார் எனக்கு அந்த ரெட்ட தல டைட்டில் வேண்டும் கொடுங்கள் என்று கேட்டார். நானும் கொடுத்துவிட்டேன். நான் கொடுக்கவில்லை என்றால் எப்படியாவது என்னிடம் இருந்து வாங்கியிருப்பார். டிரைலரைப் பார்க்கும்போதே தெரிகிறது, இந்த படத்திற்கு அந்த டைட்டில் நன்றாக பொருந்தி உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

ஷாக்: என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் அருண் விஜய் ரொம்பவும் மாறிவிட்டார். அவரது கதைத் தேர்வு மிகவும் நன்றாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடத்தில் அவர் ஒரு வீடியோ காட்டினார். அதாவது விமானத்தில் இருந்து குதிக்க வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி எடுத்துள்ளார். நான் பார்த்து வியந்து விட்டேன். படத்தின் டிரைலர் பெரிய வெற்றிக்கான நம்பிக்கையை கொடுக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X