ஆசை இல்லை பேராசைப்படும் ஏ. ஆர். முருகதாஸ்: நடக்குமா?
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் விஷயத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேராசைப்படுகிறார்.
நாளை தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்களிக்க பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். சிலரோ நான் ஓட்டு போட்டு மட்டும் என்ன ஆகப் போகிறது என்று எரிச்சலுடன் உள்ளனர்.
இந்நிலையில் ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
முருகதாஸ்
ஒரேயொரு விரலை அழுத்தி நாட்டுக்காக ஓட்டு போட முடியவில்லை என்றால் நீ தான்டா முதல் திருடன் என்று சர்கார் படத்தில் விஜய் பேசிய வசனம் அடங்கிய வீடியோவை வெளியிட்டு ஓட்டு போடுமாறு கூறியுள்ளார் முருகதாஸ்.
பார்த்து போடுங்க
ஓட்டு போடுபவர்கள் யோசித்து போடுங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
பேராசை
100% ஓட்டு அளிப்போம்..! என்கிறார் முருகதாஸ். இது பேராசை தான். ஆனால் நடந்தால் நல்லது.

பிரபலங்கள்
மறக்காமல் ஓட்டு போடுமாறு திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஓட்டு போடாமல் அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு வாக்களித்து உங்களுக்கு பிடித்த சர்காரை அமைக்கவும் என்கிறார்கள் அவர்கள்.


Click it and Unblock the Notifications











