ரஜினி படத்தை துவங்கும் முன்பு பழனி முருகன் கோவிலுக்கு சென்ற முருகதாஸ்: வைரல் போட்டோ
Recommended Video

சென்னை: ரஜினியை வைத்து படப்பிடிப்பை துவங்கும் முன்பு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தள்ளிப் போயுள்ளது.

படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் படம் நல்லபடியாக வர வேண்டி முருகதாஸ் பழனி முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதை ரஜினி ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படம் ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ்.
ரொம்ப காலம் கழித்து ரஜினியை காக்கி உடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











