twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொறுமையை இழந்த முருகதாஸ்: சர்கார் படக்குழுவுக்கு எச்சரிக்கை

    By Siva
    |

    Recommended Video

    பொறுமையை இழந்த முருகதாஸ்: சர்கார் படக்குழுவுக்கு முருகதாஸ் எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: சர்கார் படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் சிலர் படம் குறித்து பேட்டி அளித்துள்ளனர்.

    பேட்டியின்போது சர்கார் கதை பற்றிய விபரத்தை தெரிவித்துள்ளனர்.

    முருகதாஸ்

    ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் பேட்டியை பார்த்த முருகதாஸ் கோபம் அடைந்து ட்விட்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்களின் அனுமதி இல்லாமல் பேட்டி அளிப்போர் மீது இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடின உழைப்பு வீணாவதால் முருகதாஸ் பொறுமையை இழந்துள்ளார்.

    போஸ்டர்

    முதலில் எங்களை சஸ்பெண்ட் செய்ததற்கு பதில் சொல்லுங்க சார். அதிகாரப்பூர்வ போஸ்டரை கூட போஸ்ட் பண்ணக் கூடாதா? தளபதி பேச்சின் லிங்கை ஷேர் பண்ணக் கூடாதா நாங்க?? அப்புறம் நாங்க ஃபேன்ஸுன்னு எதுக்கு இருக்கோம் ட்விட்டரில் என்று தளபதி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

    சன் பிக்சர்ஸ்

    சார், சன் பிக்சர்ஸை முதலில் ரிப்போர்ட் அடிக்கிறதை நிறுத்த சொல்லுங்க.. நாங்கள் தளபதி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான போட்டோம். அதுக்கு சஸ்பெண்ட் பண்றது கரெக்டா என்று முருகதாஸிடம் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தயாரிப்பு

    சன் பிக்சர்ஸ் செய்வது மட்டும் சரியா என்று முருகதாஸிடம் பல ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

    English summary
    Director AR Murugadoss has tweeted that, 'Dear Sarkar Cast n Crew, So many people have put their hardwork for the making of this movie. Despite, there are many interviews by Junior artists, which is unethical. In the future, strict legal actions will be taken against people who give interviews without our consent.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X