AR Rahman: AR ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் சர்ச்சை... தொடங்கியது டிக்கெட் Refund... ACTC அறிவிப்பு!
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
ஈசிஆர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாடுகள் செய்யாததால், ரசிகர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
இதனால் ஏஆர் ரஹ்மான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததோடு, டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கேட்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதனையடுத்து தற்போது ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு, பணம் திருப்பிக் கொடுக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாம்.

டிக்கெட் கட்டணம் திருப்பிச் செலுத்தும் பணி தொடங்கியது: இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான், பல மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேபோல், பல நாடுகளிலும் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.
ஆக.12ம் தேதி நடைபெறவிருந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் இந்த மாதம் 10ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ACTC என்ற நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது. ஆனால், அவர்களது குளறுபடிகளால், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, மறக்காது நெஞ்சம் போல சோகத்தில் முடிந்தது. அதாவது ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மைதானத்திற்கு உள்ளே செல்ல முடியாமல், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெளியேறினர்.
உள்ளே சென்றவர்களும் சரியான இருக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டனர். அதுமட்டும் இல்லாமல் சரியான பார்க்கிங் வசதிகள் இல்லாததால், ஈசிஆர் சாலை முழுவதுமே டிராபிக் ஜாமில் சிக்கித் திணறியது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். அதேபோல், பல ஆயிரங்கள் செலவு செய்து டிக்கெட் வாங்கியவர்கள், பணம் வீணாகிப் போனதே என வேதனையுடன் குமுறினர். இவ்வாறாக பல விதங்களிலும் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சர்ச்சையானது.

இதுபற்றி விசாரணை நடத்திய காவல்துறை, 25000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு, 40000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதனையடுத்து இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனம், இதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியது. அதேபோல், ஏஆர் ரஹ்மானும் மன்னிப்புக் கேட்டதோடு, நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் எனக் கூறினார்.
அதன்படி டிக்கெட் மெயில் செய்திருந்த 4000 பேருக்கு மட்டும், உடனடியாக டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. அவர்கள் தவிர ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்த ரசிகர்களுக்கும் தற்போது டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படுவதாக ACTC நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது 3 வலைத்தளங்கள் வழியாகவும் பணம் திருப்பிச் செலுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். ரசிகர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிக்கவும் என ACTC நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











