பிகில் படத்துல ஏஆர் ரஹ்மான் பாட்டு மட்டும் பாடலிங்கோ!
சென்னை: பிகில் படத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து பாடியிருப்பதோடு மேலும் ஒரு வேலையும் செய்துள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் 63வது படம் பிகில். இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21ஆம் தேதி வெளியானது. அதன் மூலம் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது தெரியவந்தது.

சிங்கப்பெண்ணே பாடல்
கால்பந்து கோச்சாக ஒரு விஜயும் அப்பாவாக ஒரு விஜயும் என இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர். அண்மையில் இந்த படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் சிங்கிள் ட்ராக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ரஹ்மான் நடிக்கிறார்
இந்த பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலை ஏஆர் ரஹ்மான்தான் பாடியிருந்தார். இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் சிங்கப்பெண்ணே பாடலில் விஜயுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக
ஏஆர் ரஹ்மான் இதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக விஜயுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ்
பிகில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











