நடிப்பிலும் பின்னி பெடலெடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. வைரல் புகைப்படம் !

சென்னை : ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் மோகன் லால் நடிக்கும் ஆராட்டு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

ஆக்ஷன் மற்றும் மசாலா திரைப்படமாக ஆராட்டு திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்கி வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் அட்லியின் இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் ஏற்கனவே நடித்து இருந்தார்.

AR Rahman acting in malayalam movie Aarattu

ஆஸ்கர் நாயகன்

சின்ன சின்ன ஆசையில் அறிமுகமாக இன்று வரை தனது அசாத்தியமான இசையால் அனைவரையும் வசியப்படுத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு ஸ்லம்டாக் மில்லியன் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தார். ஹாலிவுட்டிலும் கலக்கி வந்த இசைப்புயல் தற்போது தமிழ் மற்றும் இந்திய மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் நடிகராக களமிறங்க உள்ளாராம்.

சிறப்பு தோற்றம்

மலையாள திரைப்படமான ஆராட்டுவில் பாடல் காட்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் மற்றும் மசாலா திரைப்படமான இப்படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிகில்

ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2019ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடலின் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இதுவே ஏ.ஆர்.ரஹ்மான் நடித்த முதல் திரைப்படமாகும். இசையில் கலக்கிய ஏஆர் ரஹ்மான் இனி நடிப்பிலும் இனி பின்னி பெடலெடுக்கப்போறாரு என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X