இதயத்திலேயே இறைவன் இருக்கிறான்.. வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை தவிருங்கள்.. ஏ.அர். ரஹ்மான் அட்வைஸ்!
சென்னை: கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி எடுத்து வரும் நிலையில், கூட்டம் கூட்டமாக வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்வதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் அதிகளவில் மக்களை தாக்காமல் இருக்கவும், கொரோனா வைரஸ் பாதித்த மக்களை காப்பாற்றவும் பல்லாயிரக் கணக்கான மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் உயிரையும் கொடுத்து போராடி வருகின்றனர்.
அத்தைகைய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளா ஏ.ஆர். ரஹ்மான்.

உலகளவில்
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கி, உலகம் முழுவதும் படு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகளவில் 9 லட்சத்திற்கும் மேலான மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உயிர் பலி அதிகரித்துள்ளது.

கொரோனா பலி
200க்கும் மேற்பட்ட நாடுகளை படாத பாடு படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு, உலகளவில் இதுவரை 47 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில், அதனை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தவிக்கின்றன.

மக்கள் அலட்சியம்
இந்தியாவில் 500 முதல் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டி உள்ளது. பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல், இஷ்டத்துக்கு சாலைகளில் உலா வருகின்றனர். கூட்டம் கூட்டமாக வழிபாட்டு வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
ரஹ்மான் அட்வைஸ்
கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தீவிரத்தை உணர்ந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்டதொரு பதிவை பதிவிட்டுள்ளார். இறைவன் இதயத்திற்குள்ளே இருக்கிறான். அதை விட சிறந்த கோயில் எதுவும் இல்லை. மருத்துவர்கள் நமது உயிரை காக்க போராடி வரும் நிலையில், கூட்டம் கூட்டமாக வழிபாட்டுத் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை தவிருங்கள் என அட்வைஸ் செய்துள்ளார்.

மருத்துவர்களுக்கு நன்றி
கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளித்து வரும் பணியில் உலகம் முழுவதும் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தாக்கி பலியாகி உள்ள கோர சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அப்படி இருந்தும், தங்கள் உயிரை பெரிதாக நினைக்காமல் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











