மீண்டும் தமிழ்த்தாய்க்கு மரியாதை... எங்கு இருந்தாலும் தமிழை மறக்காத இசைப்புயல்!
மும்பை : இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு தமிழ் மீது எப்போதுமே தீராத காதல் உண்டு. பாலிவுட், ஹாலிவுட் என்று தொடர்ந்து மற்ற இடங்களில் பிசியாக இருந்தாலும் தமிழ் மீதான தன்னுடைய காதலை அவர் பல தருணங்களில் நிரூபித்துள்ளார். ஆஸ்கர் மேடையிலும் இதை நாம் பார்த்திருக்கலாம்.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஏஆர் ரஹ்மான். இதை நிரூபிக்கும் வகையிலேயே அவரது இசை அனைவரையும் புயலாக ஆட்கொண்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வந்தாலும் அனைவரையும் தன்னுடைய பல தரப்பிலான இசையால் அவர் வசீகரித்து வருகிறார்.

சர்வதேச அளவில் ஏஆர் ரஹ்மான்
ரோஜாவில் ஆரம்பித்த இவரது பயணம், தொடர்ந்து இந்திய அளவில் சிறப்பான பல பாடல்களால் நிறைந்து வருகிறது. தற்போது அதிகமாக பாலிவுட்டில் கவனம் செலுத்திவரும் ஏஆர் ரஹ்மான் தமிழிலும் அதிகமான படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஹாலிவுட்டிலும் இவரை காண முடிகிறது.

அடுத்தடுத்த படங்களில் பிசி
தமிழில் இவரது இசையில் கோப்ரா, அயலான், பத்து தல, இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார்.

தமிழ் மீதான காதல்
சர்வதேச அளவில் பணிபுரிந்தாலும் தன்னுடைய பணிவையும் தமிழ் மீதான தன்னுடைய விருப்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் உள்ளார் ஏஆர் ரஹ்மான். கடந்த ஆண்டில் தன்னுடைய மாஜா இசை நிறுவனம் மூலம் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான என்ஜாயி என்சாமி வீடியோ ஆல்பத்தை வெளியிட்டார்.

தமிழ் இசை ஆல்பம்
தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மூப்பில்லா தமிழே தாயே என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதற்கு கவிஞர் தாமரை வரிகளை எழுதியிருந்தார். இந்த ஆல்பத்தில் ஏஆர் ரஹ்மான், ஏஆர் அமீன் உள்ளிட்டவர்கள் பாடி நடித்துள்ளனர். அமீத் கிருஷ்ணன் இயக்கத்தில் இந்த ஆல்பம் வெளியானது.

தமிழணங்கின் புதிய புகைப்படம்
இதன்மூலம் தனது தமிழ்ப் பற்றை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் ஏஆர் ரஹ்மான். இந்நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழணங்கு என்ற அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் அதை ஷேர் செய்து வருகினற்னர்.


Click it and Unblock the Notifications











