நயன்தாராவை ஹக் பண்ண அனிருத்.. விக்கி - நயனை மகனுடன் வந்து வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்.. செம க்ளிக்ஸ்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டால்மென்ட் முறையில் தனது திருமண புகைப்படங்களை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். தற்போது இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Nayanthara Marriage-க்கு Cute-ஆ வந்து வாழ்த்திய Surya, Jyothika

ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, விஜயேதுபதி திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகி டிரெண்டான நிலையில், தற்போது அனிருத் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் திருமணத்தில் பங்கேற்ற போட்டோக்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா திருமணம் எந்தளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது என்பதை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.

நயன்தாரா திருமணம்

நயன்தாரா திருமணம்

கடந்த ஜூன் 9ம் தேதி காலை 10 மணியளவில் திரை நட்சத்திரங்கள் பங்கேற்க பிரம்மாண்டமான முறையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோலாகலமாக மகாபலிபுரம் அருகே உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. சிகப்பு கலர் சேலையில் செழிப்பான அழகுடன் நயன்தாரா மணமகளாக மேடையை அலங்கரிக்க இயக்குநர் விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையில் மாஸ் காட்டினார். நயன்தாரா கழுத்தில் திருமாங்கல்யம் ஏறிய புகைப்படத்தை அப்போதே வெளியிட்டு இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி

திருமணம் முடிந்து நேராக வீட்டுக்கு கூட போகாமல் திருப்பதி ஏழுமலையானை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் போட்டோஷூட் நடத்தப்பட்ட நிலையில், நடிகை நயன்தாரா காலில் செருப்பு அணிந்திருந்தார் என்கிற சர்ச்சையும் வெடித்தது. அதற்கு தேவஸ்தானத்திடம் இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

திருமணம் முடித்த பிறகு கொச்சிக்கு சென்று அம்மாவை சந்தித்தார் நயன்தாரா. அங்கே விருந்து முடித்த இருவரும் பின்னர் ஹனிமூனுக்காக தாய்லாந்து பறந்து சென்றனர். நயன் மற்றும் விக்கியின் ஹனிமூன் ரொமான்ஸ் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வந்தார்.

திருமண புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள்

இந்நிலையில், திருமணம் ஆன ஒரு மாதத்திற்கு பிறகு போட்டோ ஆல்பம் வந்து விட்டது போலத் தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களையும், நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு அவர்கள் ஆசி வழங்கிய போட்டோக்களையும் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

சூர்யா ஜோதிகா

சூர்யா ஜோதிகா

கொஞ்சம் கேப் விட்டு சூர்யா மற்றும் ஜோதிகா திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த க்யூட்டான புகைப்படம் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அடுத்த செட் புகைப்படங்களை ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

மகனுடன் ஏ.ஆர். ரஹ்மான்

மகனுடன் ஏ.ஆர். ரஹ்மான்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் தனது மகன் ஏ.ஆர். அமீன் உடன் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். பூங்கொத்து கொடுத்தும் மணமக்களை வாழ்த்தியும் ஏ.ஆர். ரஹ்மான் செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.

நயனுக்கு ஹக் கொடுத்த அனிருத்

நயனுக்கு ஹக் கொடுத்த அனிருத்

வேலைக்காரன், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நயன்தாராவுக்கு தாறுமாறான பாடல்களை போட்டு ஹிட் கொடுத்த ராக்ஸ்டார் அனிருத் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் நயனையும் ஹக் பண்ணி வாழ்த்திய புகைப்படங்கள் வேறலெவலில் டிரெண்டாகி வருகின்றன. மேலும், தனது இசைக் குழுவுடன் அனிருத் திருமணத்தில் கலந்து கொண்டு கலக்கிய புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X