கோவிஷீல்டு.. முதல் டோஸ் போட்டாச்சு.. மகனுடன் செல்பி எடுத்து அறிவித்த ஏஆர் ரஹ்மான்!
சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போட்டு விட்டதாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது.
பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடுகளை அறிவித்தன.

பிரபலங்கள் தடுப்பூசி
இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்களும் சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். திரை பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மகனுடன் தடுப்பூசி
அந்த வகையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை போட்டுள்ளார். தனது மகனுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

தடுப்பூசி போட்டாகிவிட்டது
தடுப்பூசி போட்டக் கையோடு தனது மகனுடன் செல்பி எடுத்துள்ள ஏஆர் ரஹ்மான், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டாகி விட்டது.
Recommended Video

நீங்கள் போட்டுவிட்டீர்களா
கோவிஷீல்டு.. நீங்கள் போட்டுவிட்டீர்களா என்றும் கேட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் தனது மகனுடன் செல்பி எடுத்த போட்டோ ரைவலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











