இலக்கு தமிழ்நாடு தான்.. இளையராஜாவுடன் ஏ.ஆர். ரஹ்மான்.. க்யூட்டான வீடியோவுக்கு குவிந்த ரியாக்‌ஷன்ஸ்!

சென்னை: இரு பெரும் இசை ஜாம்பவான்கள் ஒன்றாக பயணிக்கும் வீடியோவை ஷேர் செய்து எந்த கண்டத்தில் இருந்து புறப்பட்டாலும் இலக்கு தமிழ்நாடு தான் என ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளது பல பிரபலங்களையும் ரசிகர்களையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இளையராஜா வெளிநாடுகளில் இசை கச்சேரிகளை முடித்து விட்டு ஓரிடத்தில் சந்தித்த நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

இளையராஜாவின் ட்ரூப்பில் இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார். இந்நிலையில், தனது குருவுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக பயணித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ் சினிமாவின் தலை சிறந்த இரு இசையமைப்பாளர்களை ஒரே வீடியோவில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சேருமிடம் தமிழ்நாடு

சேருமிடம் தமிழ்நாடு

புதபெஸ்ட்டில் இருந்து வந்த இளையராஜா மற்றும் அமெரிக்காவின் கனடா நாட்டில் இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் இருவரும் தமிழ்நாட்டை நோக்கி பயணித்த அனுபவத்தை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்த கண்டத்தில் இருந்து வந்தாலும், போய் சேருமிடம் தமிழ்நாடு தான் என பதிவிட்டுள்ளார்.

ஸ்வேதா மோகன் ஹேப்பி

ஸ்வேதா மோகன் ஹேப்பி

எங்களுடைய முக்கியமான இரு பொக்கிஷங்கள் ஒன்றாக பயணிக்கும் வீடியோவை பார்க்கவே கொடுத்து வச்சிருக்கணும். என்னவொரு கேப்ஷன், என்னவொரு கேப்சர் என பாடகி ஸ்வேதா மோகன் ஏ.ஆர். ரஹ்மான் போட்ட வீடியோவை ரீட்வீட் செய்து மெய் சிலிர்த்துள்ளார். ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் அந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கனடா தெருவுக்கு ரஹ்மான் பெயர்

கனடா தெருவுக்கு ரஹ்மான் பெயர்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடா நாட்டில் உள்ள மார்கம் நகரின் தெருவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயரை சூட்டி இருந்தனர். அந்த விழாவுக்கு சென்று விட்டு வெந்து தணிந்தது காடு மற்றும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை திரும்பி உள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

தமிழ்நாட்டின் பெருமை

தமிழ்நாட்டின் பெருமை

இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை ஷேர் செய்து இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் பெருமை என இசையுலக ரசிகர்கள் கூஸ்பம்ஸ் உடன் ட்வீட் போட்டு வருகின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் லைவ் பர்ஃபார்மன்ஸை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X