AR Rahman: மாமன்னன் படத்துக்காக சீனில் வரும் ஏஆர் ரஹ்மான்... தீ பிடிக்கும் செகண்ட் சிங்கிள் அப்டேட்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மாமன்னன் செகண்ட் சிங்கிள் அப்டேட்:
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என உதயநிதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேநேரம் இந்தப் படத்தில் வடிவேலு தான் மாமன்னன் என்ற லீட் ரோலில் நடித்துள்ளதாக மாரி செல்வரஜ், உதயநிதி இருவருமே கூறியிருந்தனர். இதுநாள் வரை காமெடியில் பார்த்து ரசித்த வடிவேலு, மாமன்னன் படத்தில் சீரியஸ்ஸான ரோலில் நடித்துள்ளார். இதனால், வடிவேலு கேரக்டர் எப்படி இருக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கடந்த வாரம் வெளியான ராசா கண்ணு பாடல் லீட் கொடுத்திருந்தது.

ஏஆர் ரஹ்மான் இசையில், யுகபாரதி வரிகளில் ஒப்பாரியும் ஒரு சமூகத்தின் வலியும் கலந்த பாடலாக ராசா கண்ணு வெளியானது. முக்கியமாக வடிவேலுவின் குரலில் இந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள், இதுதான் அவரது கேரியரில் உச்சம் என பாராட்டி இருந்தனர். இந்நிலையில், மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் பாடல் நாளை (மே 27) வெளியாகவுள்ளது.
மாமன்னன் செகண்ட் சிங்கிள் அப்டேட்டாக வெளியான போஸ்டரில், ஏஆர் ரஹ்மானும் மாரி செல்வராஜும் மாஸ் காட்டுகின்றனர். பிளாக் அன்ட் ஒயிட் கலர் டோனில் உருவாகியுள்ள இந்த போஸ்டரில், ஏஆர் ரஹ்மான், மாரி செல்வராஜ் இருவரும் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளனர். மேலும் இந்தப் பாடலுக்கு ஏஆர் ரஹ்மான் Reggae என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

அதனால், மாமன்னன் செகண்ட் சிங்கிள் ராப் இசை பின்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடலை வடிவேலு குரலில் வெளியிட்ட மாமன்னன் படக்குழு, செகண்ட் சிங்கிளில் வேற லெவலில் தெறிக்கவிடும் என ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இதனிடையே மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும், இதில் கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











