Hoote செயலியில் இணைந்த இசைப்புயல் மற்றும் பீஸ்ட் இயக்குநர்.. சந்தோஷத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த்!

சென்னை: ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து தற்போது ஹூட் (Hoote) செயலிக்கும் பிரபலங்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகி வருகிறது.

செளந்தர்யா ரஜினிகாந்த், அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலா இணைந்து நிறுவியுள்ள குரல் அடிப்படையிலான இந்த செயலியை நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

எழுத படிக்காத தெரியாத நபர்கள் கூட குரல் மூலம் தங்கள் கருத்தை சொல்லக்கூடிய இந்த செயலியை பல பிரபலங்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஹூட் செயலி

ஹூட் செயலி

ட்விட்டரில் தம்பிகளுக்கு பதிலாக தம்பதிகள் என பதிவிட்டு சமீபத்தில் நடிகை குஷ்பு சர்ச்சையில் சிக்கியது போல எழுத்து பிழைகளால் பிரச்சனை வராமல் இருக்கவும் எழுத படிக்க தெரியாதவர்களும் செயலியை பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த ஹூட் செயலி குரல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிகாந்த் மகள்

ரஜினிகாந்த் மகள்

அனிமேஷனில் அப்பாவை உருவாக்க வேண்டும் என சுல்தான் தி வாரியர் படத்தை ஆர்ம்பித்து பின்னர் கோச்சடையானாக அந்த படம் வெளியானது. ஆரம்பத்தில் இருந்தே தொழில்நுட்ப ரீதியாக புதுமைகளை படைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் முன்னெடுத்துள்ள இந்த டெக் நடவடிக்கை பலரது பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

ஆரம்பித்து வைத்த அப்பா

ஆரம்பித்து வைத்த அப்பா

நடிகர் ரஜினிகாந்த் முதல் நபராக இந்த ஹூட் செயலியில் தனது கருத்தை குரல் பதிவாக பதிவு செய்து ஆரம்பித்து வைத்தார். சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவை அறிந்து அவருக்கான இரங்கலையும் ஹூட் செயலியில் ரஜினிகாந்த் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இசைப்புயல் ’இன்’

இசைப்புயல் ’இன்’

இசையில் புதிய புதிய டெக்னாலாஜிகளை புகுத்தி உலகம் முழுக்க இசைப்புயலாக வீசிக் கொண்டிருக்கும் ஏ.ஆர். ரஹ்மானும் இந்த ஹூட் ஆப்பில் இணைந்துள்ளார். அந்த செய்தியை அறிந்து செளந்தர்யா ரஜினிகாந்த் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு என தனது சந்தோஷத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் இயக்குநரும்

பீஸ்ட் இயக்குநரும்

ஏகப்பட்ட பிரபலங்கள் தொடர்ந்து இந்த செயலியில் அப்படி என்ன தான் இருக்கு என புதுசா ஒரு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி பார்க்க, பிரபலங்களை வரவேற்று வருகிறார் செளந்தர்யா ரஜினிகாந்த். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குநர் நெல்சனும் இந்த ஹூட் செயலியில் இணைந்துள்ள நிலையில், அவரையும் செளந்தர்யா ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X