PS 2 இசை வெளியீட்டு விழாவில் பிரம்மாண்டம்... ஏஆர் ரஹ்மான் கொடுத்த தரமான அப்டேட்!

சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான 'அக நக' பாடல் சமீபத்தில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து மற்ற பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து ஏஆர் ரஹ்மான் அப்டேட் கொடுத்து அசரடித்துள்ளார்.

வரும் 29ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் அதேநேரம் பாடல்களும் வெளியிடப்படும் என தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் PS 2 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அக நக பாடல் வெளியானது. ஏஆர் ரஹ்மானின் இசையில் மெலடியாக உருவாகியுள்ள அக நக பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

ஏஆர் ரஹ்மான் கொடுத்த அப்டேட்

ஏஆர் ரஹ்மான் கொடுத்த அப்டேட்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் குறித்து அப்டேட் கொடுத்திருந்தனர். ஆனால், இது முதல் பாகத்தின் ட்ரெய்லர் போல பிரம்மாண்டமாக வெளியிடப்படுமா என்பது பற்றி தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில், தற்போது ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 29ம் தேதியன்றே பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் வெளியாகின்றன.

பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா

பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா


மேலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். முதல் பாகத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா போன்றே, 2ம் பாகத்திற்கும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

பொன்னியின் செல்வன் பாடல்கள்

பொன்னியின் செல்வன் பாடல்கள்

இந்த டிவிட்டர் பதிவில், பொன்னியின் செல்வன் பாடல்கள் ரிக்கார்டிங் செய்யப்பட்ட மேக்கிங் வீடியோவையும் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதில், சக்தி ஸ்ரீ கோபாலன், ஸ்வேதா மேனன், சின்மயி ஆகியோர் பாடல்கள் பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள் யார்?

சிறப்பு விருந்தினர்கள் யார்?

PS 2 ட்ரெய்லர், பாடல்கள் இரண்டும் ஒரே விழாவில் வெளியிடப்படுகிறது. இதனால் சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும். அதன்படி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் ஆகியோருடன் விஜய்யும் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் பாரதிராஜாவும் பங்கேற்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X