தூய்மை, தாய்மை, காதல், கடவுள்.. பார்த்திபனின் கேள்விகளுக்கு இசையால் பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!
சென்னை: ரோஜாவில் ஆரம்பித்து இன்னும் அந்த இசைப்புயல் கரையை கடக்காமல் இசை உலகை ஆட்சி செய்து வருகிறது.
Recommended Video
நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில், வெளியான ப்ரீமியர் காட்சியை பார்த்த பலரும் பார்த்திபனின் உழைப்பையும், ஏ.ஆர் ரஹ்மானின் இசையையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இசையால் பதில்
இசையமைப்பாளரிடம் பேட்டி எடுக்கக் கூடாது என்றும அவரை பேச வைக்காமல் அவரிடம் எப்படி பேட்டி எடுப்பது என்கிற புதிய முயற்சியை பார்த்திபன் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழாவில் நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. பார்த்திபன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் இசையால் ஏ.ஆர். ரஹ்மான் அளிக்கும் பதில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மாத்தியோசி
எல்லோரையும் போல யோசிப்பவர்கள் கலை படைப்பாளியாகவே இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு எப்போதுமே மாத்தி யோசித்து வரும் பார்த்திபனின் இரவின் நிழல் முயற்சி பற்றி கேட்டதும், அவர் கதை சொல்லி முடிக்கும் முன்னமே இந்த படம் நாம பண்ணலாம் என ஏ.ஆர். ரஹ்மான் இமிடியேட் ஓகே சொல்லி விட்டேன் என அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார். பல முறை பார்த்திபன் தன்னிடம் அணுகிய நிலையில், சும்மா எல்லாம் பண்ணக் கூடாது. பண்ணா சூப்பரா ஒன்னு பண்ணனும்னு நினைத்த ரஹ்மானை தனது கதையால் திருப்தி படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

தூய்மை, தாய்மை, காற்று
அந்த நிகழ்ச்சியில் தூய்மை பற்றி உங்கள் கருத்துக்களை இசையால் சொல்லுங்கள் என்றதுமே 'வந்தே மாதரம்' பாடலின் இசையை மீட்டி பதில் அளித்தார். பின்னர் வன்முறை பற்றிய கேள்விக்கு அதிலும் மென்மையான இசை கலந்து தனக்கே உரிய பாணியில் ரஹ்மான் பதிலளித்தது சிறப்பு. தாய்மை பற்றிய கேள்விக்கு காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா பாடலை வாசித்தார். காற்று என்கிற கேள்விக்கு ரிதம் படத்தில் இடம்பெற்ற காற்றே என் வாசல் வந்தால் இசையை மீட்ட ஒட்டுமொத்த அரங்கமே கரவொலி எழுப்பியது.

காதலுக்கு இரவின் நிழல் பாட்டு
காதல் என பார்த்திபன் சொன்னதும், எத்தனையோ காதல் பாடல்களை இசையமைத்து இருந்தாலும், பார்த்திபனின் இரவின் நிழல் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள ‘மாயவா தூயவா' பாடலின் இசையை மீட்ட பார்த்திபனே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டார். கடைசியாக இசை என்கிற கேள்விக்கு சைலன்ஸ் என சட்டென பதில் சொல்லி விட்டார். நிசப்தத்தை கையாள தெரிந்தால் தான் சரியான இசையமைப்பாளர் ஆக முடியும் என்பதையும் விளக்கி இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











