twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா தூதர் ஆனார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

    By
    |

    சென்னை: இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா அமைப்பில் தூதராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கான பிரிட்டிஷ் அகாடமி அமைப்பு, பாஃப்தா.

    பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அண்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற இந்த அமைப்பு, ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ் என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது.

    AR Rahman appointed BAFTA Breakthrough India ambassador

    அதன்படி, சினிமா துறையில் திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து விருதுகளையும் வழங்குகிறது. இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சினிமா, டி.வி துறையில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை பிரபலப்படுத்தும் விதமாக ரஹ்மானின் பங்களிப்பு இருக்கும்.

    நெட்பிளிக்ஸ் ஆதரவுடன் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிவதற்காக பாப்டா அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி, அந்த அற்புதத் திறமையாளர்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    English summary
    AR Rahman was announced as the ambassador for the British Academy of Film and Television Arts’ (BAFTA) ‘Breakthrough Initiative’.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X