AR Rahman: "அந்த டைம்ல Fire மாதிரி இருப்பேன்... மனைவி கூட பக்கத்துல வரமாட்டாங்க": AR ரஹ்மான் ஓபன்
சென்னை: கோலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்துவிட்டார். இப்போதும் இந்தியளவில் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருவது ஏஆர் ரஹ்மான் தான்.
படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், இசை நிகழ்ச்சிகளுக்காக ரெடியாவது குறித்து அவர் மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது.

மனைவி கூட பக்கத்துல வரமாட்டாங்க: ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், இன்று உலகளவில் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை ஏஆர் ரஹ்மான் பெறாத அவார்டுகளே இல்லை எனக் கூறலாம். அதேநேரம் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியளவில் நம்பர் 1 இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார்.
கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், பத்து தல, மாமன்னன் என ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து அயலான், லால் சலாம் போன்ற படங்களும் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளன. இன்னொரு பக்கம் தமிழ்நாடு முதல் உலகின் பல நாடுகளிலும் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஆஸ்கர் நாயகன்.
சமீபத்தில் சென்னையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சி குறித்து பிரபல யூடியூப் தளத்துக்கு ஏஆர் ரஹ்மான் பேட்டிக் கொடுத்திருந்தார். அப்போது செம்ம ரகளையாக பதில்களைக் கூறிய அவர், இசைத்துறையில் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
முக்கியமாக இசை நிகழ்ச்சிகள் குறித்து பேசிய அவர், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யங்களையும் மனம் திறந்து பேசினார். அதாவது இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு ரொம்பவே அதிகமான எனர்ஜி தேவை எனவும், அதற்காக நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தால் மட்டுமே பாட முடியும் என்றுள்ளார். தூக்கம், ரெஸ்ட் இல்லையென்றால் வாய்ஸ் சரியாக வராது எனவும் கூறியுள்ளார்.
அப்படி இசை நிகழ்ச்சிக்காக ரெஸ்ட் எடுக்கும் போதும், பாடல்கள் பிராக்டீஸ் செய்யும் போதும் ஃபயர் மோடில் இருப்பேன். அப்போது யாரும் என்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள். என் மனைவி, மகன், மகள்கள் யாருமே என் பக்கம் வந்துவிடவே மாட்டார்கள். அவர்களுக்கு நான் எப்படி இருப்பேன் என்பது தெரியும் என ஃபன்னியாக பேசியுள்ளார். அதேபோல், டான்ஸ் ஆடிக்கொண்டே பாடுவதற்கு தனி எனர்ஜி தேவை, அது சின்ன வயதில் இருந்து பழகினால் மட்டுமே பாட முடியும் எனவும் ஏஆர் ரஹ்மான் மனம் திறந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











