AR Rahman: ‘மீண்டும் மீண்டுமா..?’ சிம்புவுடன் இணையும் ஏஆர் ரஹ்மான்... STR 48 மாஸ் அப்டேட் இதோ!

சென்னை: பத்து தல-யை தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், STR 48 படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

 AR Rahman: AR Rahman to collaborate with Silambarasan for STR 48

சிம்புவுடன் மீண்டும் இணையும் ஏஆர் ரஹ்மான்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் சிம்புவும் ஒருவர். பல தோல்விப் படங்கள், சர்ச்சைகள், ஃபீல்ட் அவுட் என எது நடந்தாலும் சிம்புவுக்கு என மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் முதல் கம்பேக் கொடுத்த சிம்பு, பின்னர் மீண்டும் ஃபீல்ட் அவுட் ஆனார்.

இதனால் சிம்புவின் கேரியரே முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், 2021ல் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை கடந்தது மாநாடு. அதன்பின்னர் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.

கடந்த மார்ச் மாதம் பத்து தல வெளியானதும் தாய்லாந்து சென்றிருந்த சிம்பு, அதன்பின்னர் லண்டனில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருகிறார். இது எல்லாமே அவரது 48வது படத்திற்காக என சொல்லப்படுகிறது. சிம்புவின் 48வது படமான STR 48 ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலம் பிரபலமான தேசிங் பெரியசாமி STR 48 படத்தை இயக்கவுள்ளார்.

ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகும் STR 48ல் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் கமல்ஹாசனும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு, இயக்குநர் தேசிங் பெரியசாமி தவிர, மற்ற நடிகர்கள், டெக்னிக்கல் டீம் குறித்த அப்டேட்ஸ் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

 AR Rahman: AR Rahman to collaborate with Silambarasan for STR 48

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்த சிம்பு - ஏஆர் ரஹ்மான் காம்போ, அதன்பின்னர் அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் இணைந்தது. சிம்புவுக்காகவே பத்து தல படத்திற்கு இசையமைத்ததாக AR ரஹ்மானே கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது STR 48 படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்கிறாராம். நேற்று கோவையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது சிம்புவின் STR 48 படத்தில் இணைந்ததை ஏஆர் ரஹ்மானே கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. 6வது முறையாக சிம்பு - ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைவது STR 48 படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. STR 48 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X