AR Rahman: “கேங்ஸ்டர் லுக்கில் ஆஸ்கர் நாயகன்... சாரே கொல மாஸ்..” AR ரஹ்மானின் தெறிமாஸ் போஸ்டர்!

சென்னை: தொடர்ந்து 30 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகின் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.

தமிழில் லால் சலாம், அயலான், கமல்ஹாசனின் 234வது படம் ஆகியவை ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வருகின்றன.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கடும் சர்ச்சைகளில் முடிந்தது.

இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் கேங்ஸ்டர் லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

AR Rahman: AR Rahmans gangster look fanmade poster is trending

கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டும் ஏஆர் ரஹ்மான்


சினிமாவில் அறிமுகமாகும் போதே ஹைடெக் ட்ரெண்ட் செட்டராக என்ட்ரியானவர் ஏஆர் ரஹ்மான். 1992ம் ஆண்டு ரோஜா படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து 30 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக மாஸ் காட்டி வருகிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதும் சிறகடித்து வரும் ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் முதல் ஏராளமான சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம், கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234, சிவகார்த்திகேயனின் அயலான் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதேபோல் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கமல்ஹாசனின் KH 234 டீசர் வரும் 6ம் தேதி வெளியாகிறது. அதில் ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், இசை நிகழ்ச்சி, அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் என ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன.

இதனிடையே நேற்று வெளியான இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவில், அனிருத்தின் பின்னணி இசை பயங்கரமாக ட்ரோல் ஆகி வருகிறது. கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், இந்தியன் 2வில் அனிருத் இசை ஒர்த்தாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து இந்தியன் படத்தின் ஏஆர் ரஹ்மான் பிஜிஎம்களை, அவரது ரசிகர்கள் வைரலாக்கி அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். அதில் ஏஆர் ரஹ்மானை கேங்ஸ்டர் லுக்கிற்கு மாற்றியுள்ள ரசிகர்களின் ஃபேன்மேட் போஸ்டர் செம்ம வைரலாகியுள்ளது. கைதி படத்தின் கார்த்தியின் டில்லி கேரக்டரில் ஏஆர் ரஹ்மானை கிரியேட் செய்து மெர்சல் காட்டியுள்ளனர் ரசிகர்கள்.
மேலும் இந்த போஸ்டரின் பின்னணியில் இந்தியன் படத்தின் பிஜிஎம் மாஸ்ஸாக எடிட் செய்யப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மானும் கேங்ஸ்டர் லுக்கில் இதுவரை யாருமே பார்க்காத ஸ்டைலில் சம்பவம் செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X